அடேங்கப்பா! "தலையே சுத்துது!" பிரிட்டன் மன்னராக முடிசூட்டும் சார்லஸ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா
லண்டன்: பிரிட்டன் மன்னராக சார்லஸ் வரும் சனிக்கிழமை பதவியேற்க உள்ளார். இன்னும் சில நாட்களே இந்த விழாவுக்கு உள்ள நிலையில், அவரது சொத்து மதிப்பு குறித்துப் பார்க்கலாம்.
பிரிட்டன் நாட்டில் நீண்ட காலமாகத் தலைமை பொறுப்பில் இருந்த ராணி எலிசபெத் கடந்தாண்டு மறைந்த நிலையில், அவரது மகன் சார்லஸ் மன்னர் பதவிக்கு வந்தார். மன்னர் பணிகளை அவரே கவனித்து வருகிறார்.

இருப்பினும், அவருக்கு முடிசூட்டு விழா இன்னும் நடைபெறவில்லை. அவருக்கு வரும் மே 6ஆம் தேதி முடிசூட்டு விழா கோலாகலமாக நடக்க உள்ளது. இதற்காக ஒட்டுமொத்த பிரிட்டனும் கோலாகலமாக ரெடியாகி வருகிறது.
முடிசூட்டு விழா: 70 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் முடிசூட்டு விழா என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இன்னும் சில நாட்களில் முடிசூட்ட உள்ள மன்னர் சார்லஸ் சொத்து மதிப்பு குறித்து சில கூடுதல் தகவல்களைப் பார்க்கலாம். இரண்டாம் எலிசபெத் மகாராணி கடந்த ஆண்டு செப்டம்பரில் அவர் உயிரிழந்த போது அவரது மகனுக்கு 360 மில்லியன் பவுண்டுகள் (சுமார் ரூ. 3,600 கோடி) விட்டுச் சென்றார். இதன் மூலம் சார்லஸின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 600 மில்லியன் பவுண்டுகளாக (ரூ6100 கோடி) உயர்ந்துள்ளது.
1996இல் டயானாவிடமிருந்து விவாகரத்து பெற இவர் 17 மில்லியன் பவுண்டுகள் கொடுக்க வேண்டி இருந்தது. அதன் பின்னர் தனது முதலீடுகளைப் பரவலாக்கிய சார்லஸ் ஓரளவுக்கு நல்ல வருமானத்தை ஈட்டியிருந்தார். முதலீடு தவிரப் பல வழிகளிலும் சார்லசுக்கு வருமானம் இருந்துள்ளது.
வருவாய் என்ன: 1952இல் அவரது தாயார் எலிசபெத் ராணியானபோது, 14ஆம் நூற்றாண்டில் வாரிசுக்கு நிதி சுதந்திரத்தை வழங்க நிறுவப்பட்ட ஒரு தோட்டமான டச்சி ஆஃப் கார்ன்வால் நிறுவனத்திடமிருந்தும் சார்லசுக்கு குறிப்பிட்ட தொகை கிடைத்தது.
260 பண்ணைகள் தவிர, 52,450 ஹெக்டேர் (சுமார் 130,000 ஏக்கர்) நிலமும் இவரது பெயரில் இருக்கிறது. மேலும், இவரது பெயரில் இருக்கும் £345 மில்லியன் மதிப்பிலான வணிகச் சொத்து குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் தென் கடற்கரையில் டோர்செஸ்டருக்கு அருகில் உள்ள டச்சி நிலத்தில் பவுண்ட்பரி என்ற சமூகத்தையும் கூட சார்லஸ் உருவாக்கியுள்ளார்
இதன் மூலம் அதன் சொத்து மதிப்பு ஒரு பில்லியின் பவுண்டுகளுக்கு மேல் உயர்ந்தது. இதன் மூலம் வாரிசு என்ற அடிப்படையில் இவருக்குக் கிடைக்கும் தொகையும் ஆண்டுக்கு சுமார் £23 மில்லியனாக உயர்ந்தது. கடந்த 15 ஆண்டுகளில் இது 40 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வரியும் இல்லை: மேலும், மன்னர் குடும்ப சொத்துகளைப் பாதுகாக்கும் வகையில், அப்போது பிரிட்டன் பிரதமருக்கும் மன்னர் குடும்பத்திற்கும் இடையே 1993இல் முக்கிய ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி மன்னர் குடும்பம் முன்னோர்களிடம் இருந்து கிடைக்கும் சொத்துகளுக்கு எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை.
அதேபோல மன்னர் குடும்ப சொத்துகள் குறித்து எந்தவொரு தகவல்களும் பொதுவெளியில் வெளியிடத் தேவையில்லை. மேலும், மன்னர் குடும்பம் பயன்படுத்தும் அனைத்து சொத்துகளும் அவர்களுடையது இல்லை. சில சொத்துகள் அவர்களின் பெயரில் இருக்கும். சில சொத்துகள் பிரிட்டன் அரசு பெயரில் இருக்கும்.
அரசுக்குச் சொந்தமானது: உதாரணமாக வடகிழக்கு ஸ்காட்லாந்தில் அரச குடும்பம் கோடைக்காலத்தைக் கழிக்கும் பால்மோரல் கோட்டை, கடந்த செப்டம்பரில் ராணி இறந்த கிழக்கு இங்கிலாந்தில் உள்ள சாண்ட்ரிங்ஹாம் தோட்டம் சார்லஸ் வசம் சென்றுள்ளது. இவை அவருக்குச் சொந்தமானது.
அதேநேரம் மத்திய லண்டனில் உள்ள புகழ்பெற்ற பக்கிங்ஹாம் அரண்மனை மற்றும் தலைநகரின் மேற்கில் உள்ள வின்ட்சர் கோட்டை ஆகியவை அரசுக்குச் சொந்தமானது. மேலும், பிரிட்டிஷ் முடியாட்சியின் வரலாற்றுச் சின்னமான கிரவுன் ஜூவல்ஸ் பிரிட்டன் அரசுக்குச் சொந்தமானது. அவை எல்லாம் மன்னர் சொத்து மதிப்பில் வராது. இந்த நகைகள் மட்டும் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புகளைக் கொண்டது.
மொத்த சொத்து: இது தவிர இறையாண்மையாக என்று மன்னர் சார்லஸுக்கு ஆண்டுதோறும் "இறையாண்மை மானியம்" கிடைக்கும். இது கிரவுன் எஸ்டேட் மூலம் கிடைக்கும் வருமானத்தில் நான்கில் ஒரு பங்கின் தொகுப்பாகும். இதன் மூலம் 2021-22இல் 880 கோடி ரூபாய் கிடைக்கும்.. இது தவிர வேறு சில வழிகளிலும் மன்னருக்கு வருமானம் கிடைக்கும்.
ஒட்டுமொத்தமாகச் சேர்த்துப் பார்க்கும் போது மன்னரின் சொத்து மதிப்பு 1.8 பில்லியன் பவுண்டுகள், அதாவது 1.83 லட்சம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. முன்னரே சொன்னது போல, இது மன்னரின் தனிப்பட்ட சொத்து மட்டுமே. ஒட்டுமொத்தமாக அரசு குடும்ப சொத்து மதிப்பைக் கணக்கிட்டால் அது பெரிய லிஸ்டாக போகும்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications