அமெரிக்காவுக்கு வந்த பயம்.. மோடி என் நண்பர் தான்.. இந்தியாவை விடாமல் டிரம்ப் புகழ்வது ஏன்.. பின்னணி
லண்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை போட்டுள்ளார். இதனால் இருநாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான், ‛‛நான் இந்தியாவுடன் நெருக்கமாக இருக்கிறேன். பிரதமர் மோடியுடன் ரொம்ப நல்ல நண்பராக இருக்கிறேன். நான் அவருடன் சமீபத்தில் பேசினேன். பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தேன். இருவருக்கும் இடையே நல்ல உறவு உள்ளது'' என்று பிரிட்டனில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் டொனால்ட் டிரம்ப் கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசு முறை பயணமாக பிரிட்டன் சென்றுள்ளார். நேற்று அவர் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்தித்து பேசினார். அதன்பிறகு இருவரும் சேர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது டொனால்ட் டிரம்பிடம், ‛‛இந்தியா - அமெரிக்கா உறவு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
மோடி என் நண்பர்
அதற்கு டொனால்ட் டிரம்ப், ‛‛நான் இந்தியாவுடன் நெருக்கமாக இருக்கிறேன். பிரதமர் மோடியுடன் ரொம்ப நல்ல நண்பராக இருக்கிறேன். நான் அவருடன் சமீபத்தில் பேசினேன். பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தேன். இருவருக்கும் இடையே நல்ல உறவு உள்ளது'' என்றார்.
ரஷ்யா ஆயில் விவகாரம்
மேலும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில், ‛‛இந்தியா, ரஷ்யாவை போல் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நான் கண்டுபிடித்தேன்.
இதனால் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று நான் கூறினேன். இது உங்களுக்கு தெரியும். சீனா இப்போது எங்களுக்கு மிகப்பெரிய வரியை செலுத்தி வருகிறது. மேலும் நான் இன்னும் சில வேறு விஷயங்களை செய்ய தயாராக இருக்கிறேன்'' என்றார்.
அழுத்தத்துக்கு நடுவே புகழ்ச்சி
ரஷ்யாவிடம் இருந்து பிரிட்டன் உள்பட பிற ஐரோப்பிய நாடுகள் கச்சா எண்ணெய் வாங்க கூடாது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மற்றும் சீனாவுக்கு 50 முதல் 100 சதவீத வரி போட வேண்டும் என்று டிரம்ப் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார்.
இந்த அழுத்தத்துக்கு நடுவே டிரம்ப், பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை அருகே வைத்து கொண்டு பிரதமர் மோடி மற்றும் இந்தியா உடனான உறவு பற்றி இப்படி கூறியுள்ளார்.
பின்னணி என்ன?
முன்னதாக டொனால்ட் டிரம்ப் நம் நாட்டை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். 50 சதவீத வரிகளை விதித்தார். நம் நாட்டின் பொருளாதாரத்தை செத்துப்போய்விட்டது என்று சாடினார். ஆனால் இப்போது அவர் தனது நிலைப்பாட்டை மாற்றி உள்ளார். பிரதமர் மோடியை நண்பர் என்றும், இந்தியா - அமெரிக்கா உறவு நன்றாக இருக்கிறது என்றும் தொடர்ந்து பேசி வருகிறார். மேலும் பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்கு அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு டொனால்ட் டிரம்ப் வாழ்த்து தெரிவித்தார்.
டிரம்பின் இந்த திடீர் மாற்றத்துக்கு பிரதமர் மோடி எடுத்த ஒரு முடிவு தான் காரணம். அதாவது டொனால்ட் டிரம்ப் இந்தியா, சீனாவை குறிவைத்து வரிகளை விதித்தார். நம் நாட்டுக்கும், சீனாவுக்கும் இடையே பகை உள்ளது. இதனால் இருநாடுகளும் கைகோர்க்காது என்று அவர் நினைத்தார். ஆனால் அது நடக்கவில்லை. டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கையால் நம் நாடும், சீனாவும் கைகோர்த்தது.
டிரம்புக்கு வந்த பயம்
பிரதமர் மோடி சீனாவுக்கு சென்றார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்றார். சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து இருநாடுகளின் உறவு, வர்த்தகம், எல்லை பிரச்சனை பற்றி பேசினார். இது டிரம்புக்கு சிக்கலை ஏற்படுத்தியது.
இந்தியாவும், சீனாவும் ஒன்றிணைந்து செயல்பட்டால் அது ஆசியாவில் அமெரிக்காவை விலக்கி வைக்கும் என்று டிரம்ப் பயப்படுகிறார். இதனால் டிரம்ப் தனது நிலைப்பாட்டை மாற்றி மீண்டும் நம் நாட்டையும், பிரதமர் மோடியையும் சமாதானப்படுத்தும் வகையில் தொடர்ந்து புகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
போர் ஒருபக்கம் இருக்கட்டும்.. 10 கப்பல்களில் எண்ணெய் பரிசாக கொடுத்த ஈரான்! டிரம்ப் பெருமிதம் -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
ஈரானின் உச்ச தலைவராக.. என்னை பொறுப்பேற்க சொன்னார்கள்! நான்தான் வேண்டாம் என சொல்லிட்டேன் - டிரம்ப் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
"நீங்க சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.." கண்டிஷன் போட்ட அமெரிக்கா.. திட்டவட்டமாக நிராகரித்த ஈரான்! -
லாட் டவுன் வந்துருச்சு..கொஞ்சம் கொஞ்சமாய் முடங்கும் உலக நாடுகள்! பெட்ரோல், டீசலால் ஒர்க் ஃப்ரம் ஹோம் -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை!











Click it and Unblock the Notifications