பாலஸ்தீனுக்கு ரூ.2.5 கோடி வழங்குறேன்.. இஸ்ரேல் போரை நிறுத்தனும் - நோபல் பரிசு வென்ற மலாலா அறிவிப்பு
லண்டன்: இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் பெரும் பாதிப்புகளை சந்தித்து வரும் பாலஸ்தீன் மக்களுக்காக இந்திய மதிப்பில் ரூ.2.5 கோடி நிவாரண உதவி வழங்குவதாக நோபல் பரிசு வென்ற மனித உரிமை செயற்பாட்டாளர் மலாலா யூசுப் அறிவித்து உள்ளார்.
இஸ்ரேல் - பாலஸ்தீன் இடையே கடந்த 2 வாரமாக உக்கிரமாக போர் நடைபெற்று வருகிறது. பாலஸ்தீனின் காசா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் பன்னாட்டு படைகளின் உதவியுடன் வான்வழி மற்றும் தரை வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். காசா நகரமே சிதைந்துபோய் பலர் உயிருக்கு போராடி வருகிறார்கள். மருத்துவமனைகளில் ஏராளமான மக்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பல்வேறு நாடுகள், ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமை அமைப்புகளின் வேண்டுகோளையும் மதிக்காமல் இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. போர் விதிகளை மீறி பாஸ்பரஸ் குண்டுகளை பாலஸ்தீன் மீது வீசியும், மருத்துவமனைகள், தப்பிச் செல்லும் மக்கள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன. இந்த நிலையில் இஸ்ரேல் தாக்குதல்களில் படுகாயம் அடைந்த மக்கள் காசாவில் உள்ள அல் அஹ்லி என்ற மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அதன் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 500 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டது உலகையே உலுக்கி இருக்கிறது.
இஸ்ரேலின் இந்த செயலுக்கு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். ஆனால், இந்த தாக்குதலை தாங்கள் செய்யவில்லை என இஸ்ரேல் அரசு மறுத்து உள்ளது. இந்த நிலையில் மனித உரிமை செயற்பாட்டாளர் மலாலா யூசுப் இஸ்ரேலின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டு உள்ள பாலஸ்தீன் மக்களுக்காக 3 லட்சம் அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் ரூ.2.5 கோடி நிதி வழங்குவதாக அறிவித்து உள்ளார். பாலஸ்தீன் மக்களுக்கு உதவிகளை செய்து வரும் 3 தொண்டு நிறுவனங்கள் மூலமாக இந்த தொகையை அவர் வழங்க உள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்து உள்ளதாவது, "காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனையில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் அதிர்ச்சி அடைந்தேன். இஸ்ரேல் அரசாங்கம் காசாவில் மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும், போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன். தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன் மக்களுக்கு 3 தொண்டு நிறுவனங்கள் மூலமாக 3 லட்சம் அமெரிக்க டாலர்களை வழங்குகிறேன்.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications