பலாத்காரம் செய்த பாகிஸ்தான் கும்பல்.. சிறுமியை காப்பாற்ற லண்டனில் திரண்ட 300 சீக்கியர்கள்!
லண்டன்: மேற்கு லண்டனில் 16 வயது சீக்கியச் சிறுமி ஒருவரை, பாகிஸ்தான் கும்பலால் ஏமாற்றப் பலாத்காரம் செய்யப்பட்டார். இதற்கிடையே 200க்கும் மேற்பட்ட சீக்கிய சமூகத்தினர் ஒன்றிணைந்து அச்சிறுமியை மீட்டனர். பல மணி நேரப் போராட்டங்களுக்குப் பிறகு சந்தேகநபர் கைது செய்யப்பட்ட நிலையில், அச்சிறுமி தனது குடும்பத்துடன் மீண்டும் இணைக்கப்பட்டார் இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
பிரிட்டன் நாட்டில் ஆசிய நாட்டை சேர்ந்தவர்கள், குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய தென்கிழக்கு நாட்டை சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கிறார்கள். பலர் தலைமுறை தலைமுறையாகவும் கூட பிரிட்டனிலேயே வசித்து வருகிறார். மேலும், அங்குச் சீக்கிய சமூகத்தினரும் கூட கணிசமான அளவுக்கு வசித்து வருகிறார்கள்.

சிறுமி பலாத்காரம்
லண்டனில் பாகிஸ்தான் கேங்கை சேர்ந்த ஒருவர் சிறுமியைக் கடத்தி பலாத்காரம் செய்துள்ளான். அவனிடம் இருந்து குழந்தையை மீட்க அங்கிருந்த சீக்கியர்கள் அனைவரும் ஒன்று திரண்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. சீக்கியப் பத்திரிகையாளர் சங்கம் இது தொடர்பாகக் கூடுதல் தகல்களைப் பகிர்ந்துள்ளது.
மேற்கு லண்டன் பகுதியில் வசித்து வரும் அந்தச் சிறுமிக்கு 13 வயதாக இருந்தபோதே பாகிஸ்தானைச் சேர்ந்த அந்த நபர் பழக ஆரம்பித்துள்ளார். அந்த சிறுமிக்கு 16 வயது ஆன உடனேயே குடும்பத்தை விட்டு வரும்படி வலியுறுத்தியுள்ளார். அந்த பெண்ணும் நம்பி வந்துள்ளார். இருப்பினும், அதன் பிறகு அவரை வேறு சிலரும் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
என்ன நடந்தது!
இது குறித்து ராகேஷ் கிருஷ்ணன் சிம்ஹா என்பவர் தனது ட்விட்டரில், "16 வயது சீக்கியச் சிறுமியை பாகிஸ்தானைச் சேர்ந்த 40 வயது நபர் ஏமாற்றி அழைத்து வந்துவிட்டார். தனது குடியிருப்பில் மேலும் ஆறு பாகிஸ்தானிய ஆண்கள் இணைந்து அந்தச் சிறுமியைப் பலாத்காரம் செய்தனர். தங்கள் மகளை மீட்க 200க்கும் மேற்பட்ட சீக்கிய சமூகத்தினர் அங்குக் கூடினர். அவர்கள் வாள்களையோ அல்லது கிர்ப்பான்களையோ கொண்டு வரவில்லை. அவர்கள் தங்கள் தடிகளைக் கூட எடுத்து வரவில்லை. அவர்களைக் கதவுகளை உடைக்கவோ, கலவரம் செய்யவோ இல்லை. போலீசாரை தாக்கவில்லை.. வன்முறையில் ஈடுபடவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.
A 16 year old Sikh girl was groomed by a Pakistani Muslim man in his 40s. He took her into his flat and raped her along with 6 other Pakistani men. Over 200 members of the Sikh community gathered outside the flat to get their daughter back. They didn't bring swords or kirpans.… pic.twitter.com/EnfLltAbkM
— Rakesh Krishnan Simha (@ByRakeshSimha) January 14, 2026
முதலில் போலீசார் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்தச் சிறுமி எந்தவொரு புகாரும் சொல்லாததால் சட்ட ரீதியாக அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது எனச் சொல்லியுள்ளனர். இருப்பினும், போராட்டம் பல மணி நேரமாகத் தொடர்ந்ததால் வேறு வழியில்லாமல் அந்த நபரைக் கைது செய்தனர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சிக்கல் என்ன
பிரிட்டனைப் பொறுத்தவரை அங்கு 16 வயதானாலே வீடுகளை விட்டு வெளியேறும் உரிமை இருக்கிறது. பெற்றோர் நினைத்தாலும் அவர்களைத் தடுக்க முடியாது. மேலும், உடலுறவுக்குச் சம்மதம் தெரிவிக்கும் சட்டப்பூர்வ வயதும் 16ஆக இருக்கிறது. எனவே, பாதிக்கப்பட்ட சிறுமி புகார் அளிக்காத வரை போலீசாரால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாது.
இதுபோல சிறுமிகளை ஏமாற்றும் கும்பல் சிறுமியைக் காதலிப்பதாகச் சொல்லி மூளைச்சலவை செய்து வைத்திருப்பார்கள். இதனால் பலாத்காரத்திற்கு உட்பட்டாலும் கூட அவர்கள் புகாரளிக்க மாட்டார்கள். இதனால் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத ஒரு சூழல் ஏற்படுவதாகப் பிரிட்டன் போலீசார் கூறுகிறார்கள்.
பிரிட்டன் அரசு
கடந்த ஆண்டு ஜூன் மாதம், பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மர் இது பெரிய பிரச்சினையாக மாறியுள்ளதை ஒப்புக்கொண்டார். இங்கிலாந்து முழுவதும் ஆயிரக்கணக்கான சிறுமிகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த கும்பல்கள் மீது விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தார். ரோதர்ஹாம், ரோச்டேல் மற்றும் டெல்ஃபோர்ட் போன்ற நகரங்களில், பெரும்பாலும் பாகிஸ்தான் கும்பல் இந்தச் செயலைச் செய்து வருவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
-
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications