Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏய் ஏய்.. மாப்பிள்ளை "தாய்ப்பால்" குடிப்பதை பார்த்து அதிர்ந்த மணப்பெண்.. அப்பறம் என்னாச்சு தெரியுமா

பிரிட்டனில் திருமண நிகழ்வு ஒன்றில் நடைபெற்ற சம்பவம் இணையத்தில் ஷேர் ஆகி வருகிறது

Subscribe to Oneindia Tamil

லண்டன்: திருமண நிகழ்வு ஒன்றில் நடைபெற்ற சம்பவம் இணையத்தில் ஷேர் ஆகி வருகிறது.. இதை கேள்விப்பட்ட நெட்டிசன்கள் திரண்டு வந்து பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்.

எத்தனையோ கல்யாணங்கள் தாலி கட்டுவதற்கு கடைசி நிமிடங்களில் நின்றுபோய்விடுகின்றன.. மாப்பிள்ளை 2-ம் வாய்ப்பாட்டை சொல்லாதது, உருது வார்த்தைகளை சொல்லாதது, உள்ளிட்ட வினோத காரணங்களுக்காகவும் மணப்பெண்கள் தங்கள் கல்யாணத்தையே நிறுத்திய சம்பவங்களும் சமீப காலமாக அரங்கேறி வருகின்றன..,,

பெரும்பாலும், வரதட்சணை பிரச்சனைகள் ஏதாவது வெடித்துவிடும்.. அல்லது சம்பந்தப்பட்ட ஆணோ, பெண்ணோ, இருவரில் யாராவது ஒருவர் காதல் விவகாரங்களில் சம்பந்தப்பட்டிருப்பார்கள்.. இதனாலும் திருமணங்கள் நின்றுவிடுவது உண்டு..

 ஸ்வீட் எடு கொண்டாடு

ஸ்வீட் எடு கொண்டாடு

2 மாதங்களுக்கு முன்பு, வடமாநிலத்தில் ஒரு திருமண வரவேற்பில், மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளை ஸ்வீட் எடுத்து ஊட்டிவிட போனார்.. ஆனால், அந்த பெண் தனக்கு ஸ்வீட் வேண்டாம் என்றார்.. மாப்பிள்ளையோ, ஆசை ஆசையாக ஸ்வீட்டை அந்த பெண்ணின் வாய்க்குள் திணித்து ஊட்டினார்.. இதனால் ஆத்திரமடைந்த கல்யாண பெண், வலுக்கட்டாயமாக எப்படி தனக்கு ஸ்வீட் ஊட்டலாம் என்று கேட்டு, மணமகனை பளார் என்று ஓங்கி கன்னத்தில் அறைந்தார்.. உடனே மாப்பிள்ளைக்கு கோபம் சுர்ரென்று ஏறி, அவரும் பதிலுக்கு மணமகளிடம் பாய்ந்தார்.. மணமகள் ஒரு அறை விட்டால், மாப்பிள்ளை பதிலுக்கு பளார் பளார் என 4 அறை அறைந்தார்..

 லாஸ்ட் மினிட்

லாஸ்ட் மினிட்

மணப்பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து, சரமாரியாக தாக்கினார்.. பதிலுக்கு மணப்பெண்ணும் மாப்பிள்ளையின் சட்டையை பிடித்து இழுத்து அடித்தார்.. இவ்வளவும் மணமேடையில், எல்லார் முன்பும் அரங்கேறி, கடைசியில் அந்த கல்யாணமே நின்றுவிட்டது. இப்படி நம் ஊர் மட்டுமல்ல வெளிநாடுகளில் வேறு மாதிரியான காரணங்களால் திருமணங்கள் நின்றுவிடுவது சகஜமாகி கொண்டிருக்கிறது. கடந்த மாதம், ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவில், ஒரு இளம் ஜோடிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது... ஆனால், கல்யாண பெண்ணுக்கு ஏற்கெனவே ஒரு காதலன் இருந்துள்ளார் போலும்..

 கெஞ்சி கொஞ்சினார்

கெஞ்சி கொஞ்சினார்

கல்யாணம் நடைபெறுவதற்கு முன்பு ஒரே ஒருமுறை, தன்னுடைய காதலனை சந்திக்க ஆசைப்பட்டுள்ளார்.. அதன்படியே, காதலனை தேடி சென்று, நேரில் பார்த்து பேசிவிட்டும் வந்தார்.. அவ்வளவுதான்.. இந்த விஷயம், மாப்பிள்ளையின் காதுக்கு எட்டிவிட்டது... கோபம் உச்சிக்கு ஏறியது.. கல்யாணத்தை நிறுத்துங்கள் என்று மட்டும் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.. இதுனால் அதிர்ச்சி அடைந்த பெண், மாப்பிள்ளையிடம் எவ்வளவோ விளக்கம் தந்தும் அவர் எதையும் காதில் வாங்கவில்லை.. ரோட்டில் கீழே விழுந்து கட்டிப் புரண்டு கெஞ்சினார்.. மணமகன் வீராப்புடன் கிளம்பி செல்வதும், மணமகள் பின்னாடியே ஓடுவதும், காலில் விழுந்து கெஞ்சுவதும், என அப்பட்டமாக வீடியோவில் பதிவாகி அது வைரலானது..

மேக்கப்

மேக்கப்

இதோ இப்போது ஒரு திருமணம் பிரிட்டன் நாட்டில் நடந்துள்ளது.. ஆனால், இதுவரை இப்படி ஒரு விஷயத்தை யாருமே கேள்விப்பட்டிருக்க முடியாது.. அவர் பெயர் ஜார்ஜ் மிட்சல்.. இவர் ஒரு மேரேஜ் புரோக்கர் ஆவார்.. திருமண விழாக்களை ஏற்பாடு செய்து அதை நடத்தியும் தருபவர்.. இவரிடம் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டாக வேலை பார்ப்பவர் ஜென்னி.. ஒரு கல்யாணத்துக்கு மாப்பிள்ளைக்கு மேக்கப் போடுவதற்காக ஜென்னி போனாராம்... மணமகனுக்கு மேக்கப்பும் போட்டு முடித்துள்ளார்.. திருமணத்துக்கு இன்னும் சில நிமிடங்களே உள்ள நிலையில், அங்குள்ள ஒரு அறைக்குள் நுழைந்துள்ளார் ஜென்னி..

 ஜென்னி ஜென்னி

ஜென்னி ஜென்னி

அங்கே, மணமகன் தன்னுடைய தாயிடம் தாய்பால் குடித்துக்கொண்டு இருந்தாராம்.. இதைப் பார்த்து அதிர்ந்து போன ஜென்னி, பதறியடித்து கொண்டு வந்து, இந்த விஷயத்தை மணமகளிடம் சொல்லி உள்ளார்.. உடனே மணமகளும், அந்த ரூமுக்குள் ஓடிவந்து இந்த காட்சியை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனாராம். ஜார்ஜ் இதை கூறியதும் அதை கேட்ட நிகழ்ச்சியின் ஹோஸ்ட்டும் "இது உண்மைதானா?" என ஆச்சரித்துடன் கேட்டுக்கொண்டிருந்தார். சின்ன குழந்தையாக இருந்தபோது ஆரம்பித்த பழக்கம், இப்போதுவரை மாப்பிள்ளையால் நிறுத்த முடியவில்லையாம்..

 ஹைலைட்ஸ்

ஹைலைட்ஸ்

ஆனால், இதில் ஹைலைட் என்னவென்றால், இந்த காட்சியை நேரடியாக பார்த்து அதிர்ச்சி அடைந்த மணப்பெண், எந்தவித சர்ச்சையையும் எழுப்பவில்லை.. எந்த கேள்வியையும் மணமகனை கேட்கவும் இல்லையாம்.. திட்டமிட்டபடியே அந்த திருமணமும் இனிமையாக நடந்து முடிந்ததாம்.. இந்த விஷயத்தை ஜென்னி, தன்னுடைய ஓனர் ஜார்ஜி வந்து ஆச்சரியத்துடன் சொல்லி உள்ளார்.. உடனே ஜார்ஜ் இதை கேட்டதும், இதெல்லாம் உண்மையா? என்று கேட்டாராம்.. இந்த தகவலை இப்போது பொதுவெளியில் பகிர்ந்துள்ளதே ஜார்ஜ்தான்.. ஆனால், அந்த தம்பதி யார் என்ற அடையாளத்தை ஜார்ஜ் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+