17 வயது சிறுமி பலாத்காரம் செய்து படுகொலை.. 10 நாட்களில் உத்தரப்பிரதேசத்தில் நடக்கும் 2ஆவது சம்பவம்
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஊக்கத்தொகைக்காக விண்ணப்பம் நிரப்ப சென்ற 17 வயது சிறுமி கடத்தப்பட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10 நாட்களுக்கு முன்னர் 13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் இது அடுத்த சம்பவமாகும்.
லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் 17 வயது சிறுமி ஒருவர் திங்கள்கிழமை அருகில் உள்ள நகரத்திற்கு ஊக்கத்தொகை பெறுவதற்கான விண்ணப்பத்தை நிரப்ப சென்றிருந்தார். ஆனால் அவர் மாலை வரை ஆகியும் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து போலீஸாரிடம் அந்த சிறுமியின் பெற்றோர் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில் அந்த சிறுமியின் உடல் அவருடைய கிராமத்திலிருந்து 200 மீட்டர் தூரத்தில் உள்ள வறண்ட குட்டையில் சிதைந்த நிலையில் காணப்பட்டது.
இதையடுத்து அந்த சிறுமியின் உடலை கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் அந்த சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இதே மாவட்டத்தில் நடக்கும் இரண்டாவது சம்பவம் இது. கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி 13 வயது சிறுமி ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த சிறுமியின் கண்கள் தோண்டப்பட்டு, நாக்கு அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்ததாக அந்த சிறுமியின் தந்தை புகார் அளித்திருந்தார்.
ஆனால் இந்த புகாரை போலீஸார் மறுத்துள்ளனர். அந்த 13 வயது சிறுமியின் போஸ்ட் மார்ட்டம் அறிக்கையில் அவரது கண்களுக்கு அருகே காயம் இருந்தது உண்மைதான். ஆனால் அவரது தந்தை கூறுவது போல் கண்கள் தோண்டப்படவில்லை, நாக்கு அறுக்கப்படவில்லை. அவரது கண்களில் கரும்பு தோட்டத்தில் இருந்த இலைகளால் கீரல் ஏற்பட்டு காயம் ஏற்பட்டதுதான் உண்மை என குறிப்பிடப்பட்டுள்ளது.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications