லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேநீரில் விஷம் கலந்திருப்பீர்கள்.. போலீஸாரை சந்தேகித்த அகிலேஷ் யாதவ்.. டிஜிபி ஆபிஸில் ஸ்டண்ட்!

Google Oneindia Tamil News

லக்னோ: தனது அட்மினை கைது செய்ததை கண்டித்து போராட்டம் நடத்த டிஜிபி அலுவலகத்திற்கு சென்ற உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் அவர்கள் கொடுத்த தேநீரை அருந்த மறுத்து அதில் விஷம் கலந்திருந்தால் என்ன செய்வது என கேள்வி எழுப்பினார்.

உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ். இவர் சமாஜ்வாதி கட்சியின் தலைவராக உள்ளார். இவரது கட்சியின் ட்விட்டர் பக்கத்தை மணீஷ் ஜெகன் அகர்வால் என்பவர் கவனித்து வந்தார்.

இந்த நிலையில் சர்ச்சைக்குரிய பதிவு வெளியிட்டதாக குற்றச்சாட்டில் ஜெகனை போலீஸார் கைது செய்து அழைத்து சென்றனர். இந்த நிலையில் அவரை விடுவிக்கும்படி கோரி டிஜிபி அலுவலகத்திற்கு அகிலேஷ் யாதவ் சென்றிருந்தார்.

என்னங்க சொல்றீங்க?.. அகிலேஷ் யாதவுக்கு கொடுக்கப்பட்ட டீயில் விஷமா?.. ஷாக்.. அலறும் உ.பி. போலீஸார் என்னங்க சொல்றீங்க?.. அகிலேஷ் யாதவுக்கு கொடுக்கப்பட்ட டீயில் விஷமா?.. ஷாக்.. அலறும் உ.பி. போலீஸார்

போராட்டம்

போராட்டம்

அங்கு அவர் போராட்டத்தில் ஈடுபடுவதற்காகவே சென்றார். அவருடன் கட்சித் தொண்டர்களும் சென்றிருந்தனர். டிஜிபி அலுவலகம் வந்த அகிலேஷுக்கு போலீஸ் அதிகாரிகள் குடிப்பதற்காக தேநீர் கொடுத்தனர். அப்போது அகிலேஷ் யாதவ் தொண்டர்களிடம் உங்களுக்கு தெரியாது. எனது தேநீரில் அவர்கள் விஷம் கலந்து வைத்துவிடுவார்கள். அவர்களை (போலீஸார்) நம்ப மாட்டேன்.

 தேவையான தேநீர்

தேவையான தேநீர்

எனக்கு தேவையாண தேநீரை நானே வாங்கிக் குடித்துக் கொள்வேன். அவர்களுக்கான (போலீஸாருக்கு) தேநீரை அவர்களே குடித்து கொள்ளட்டும் என போலீஸாரிடம் கூறியிருந்தார். அதன்பின்னர் காவல் நிலையத்திற்கு வெளியே சென்று தனக்கு தேநீர் வாங்கி வரும்படி கட்சித் தொண்டர் ஒருவரை அனுப்பி வைத்தார்.

மணீஷ் ஜெகன்

மணீஷ் ஜெகன்

சமாஜ்வாதி கட்சித் தொண்டரான மணீஷ் ஜெகனை லக்னோ போலீஸார் கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது. வெட்கக் கேடானது என்றும் தெரிவித்தார். மேலும் உடனடியாக ஜெகனை போலீஸார் விடுவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். அகிஸேஷ் யாதவின் தந்தை முலாயம் சிங் யாதவ் மெயின்புரி தொகுதியின் எம்பியாக இருந்தார்.

உடல்நலக் குறைவு

உடல்நலக் குறைவு

இவர் கடந்த ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். இந்த நிலையில் இந்த தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி சமாஜ்வாதி கட்சியின் சார்பில் முலாயம் சிங்கின் மருமகளும் அகிலேஷின் மனைவியுமான டிம்பிள் யாதவ் களமிறக்கப்பட்டார். இந்த இடைத்தேர்தலில் அவரை எதிர்த்து பாஜக சார்பில் ரகுராஜ் சிங் சாக்யா போட்டியிட்டார். இந்த நிலையில் பாஜக வேட்பாளரை தோற்கடித்து டிம்பிள் யாதவ் வென்றார்.

English summary
Uttar Pradesh Ex CM Akhilesh Yadav refuses to drink tea at UP DGP police head quarters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X