கல்விக்கு முக்கியத்துவம்.. போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி! அசத்தும் யோகி ஆதித்யநாத் அரசு
லக்னோ: சாமானிய மக்களின் ஐஏஎஸ், ஐபிஎஸ் கனவை நனவாக்க உத்தரப் பிரதேச மாநில அரசு இலவச கோச்சிங் தருகிறது எனவும், பாஜக அரசு கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக அரசு நடந்து வருகிறது. இதற்கு முன்னர் இந்த மாநிலத்தில் யாரும் 6 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்தது கிடையாது. ஆனால் யோகி ஆதித்யநாத் இதனை முறியடித்து 7வது ஆண்டாக முதலமைச்சராக நீடித்து வருகிறார். இந்நிலையில் ஏராளமாக திட்டங்களையும் தொடங்கி வைத்துள்ளார். அதன் ஒரு பகுதியாக, போட்டி தேர்வுக்கான கூடுதலான இலவச கோச்சிங் சென்டர்களையும் புதியதாக தொடங்கி வைத்து வருகிறார்.

இந்நிலையில் இது குறித்து பேசிய அவர், "உத்தரப் பிரதேச அரசாங்கத்திற்கு கல்வி முக்கியமான ஒன்று. கல்வி அனைத்து தரப்பு மக்களுக்கும், குறிப்பாக சாமானிய மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதில் இந்த அரசு உறுதியாக இருக்கிறது. போட்டி தேர்வுகளில் பங்கேற்க முடியாத சாமானிய மக்களுக்கு இந்த அரசு உதவி செய்து வருகிறது. தனியார் பயிற்சி பெற முடியாதவர்களுக்கு யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் மற்றும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை மாநில அரசு நடத்தி வருகிறது.
முதலமைச்சரின் அபியுதாய் யோஜனா திட்டத்தின் கீழ் இந்த வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதன் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி, தங்கள் கனவுகளை நனவாக்கலாம். சிவில் சர்வீசஸ் (IAS), மாகாண சிவில் சர்வீஸ் (PCS), தேசிய பாதுகாப்பு அகாடமி (NDA), UPPSC/Subordinate Service Selection Commission, Combined Defence Services Examination போன்ற போட்டித் தேர்வுகளுக்கு நேரடி வகுப்புகளும் (CDA), கூட்டு நுழைவுத் தேர்வு (JEE) போன்ற தேர்வுகளுக்கு ஆன்லைன் வகுப்புகளும் நடத்தப்படுகிறது. இதன் மூலம் நமது மாநிலத்தின் கல்வியறிவு மேலும் உயரும்" என்று கூறியுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications