கல்யாணம் ஆன பெண்ணை.. பம்ப் செட்டுக்குள்.. 5 நாள் அடைத்து வைத்து.. தொடரும் உத்தர பிரதேச அட்டகாசம்
பெண்ணை கடத்தி நாசம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்
லக்னோ: கல்யாணம் ஆன பெண்ணை கடத்தி சென்று.. பம்ப் செட்டுக்குள் அடைத்து வைத்து.. 5 நாட்களும் நாசம் செய்துள்ளார் இளைஞர் ஒருவர்!! உத்திரபிரதேசத்தில் இந்த கொடுமை நடந்துள்ளது.
பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளின் கணக்கெடுப்பு கடந்த ஆண்டு வெளியானது.. அப்போது, இந்தியாவிலேயே உத்திர பிரதேசத்தில்தான் அதிக அளவு பாலியல் தொல்லை நடப்பதாக ஒரு கணக்கு தெரிவிக்கப்பட்டது.. அதிகபட்சமாக 56,011 வழக்குகள் 2017-ம் ஆண்டில் பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இந்த 2 வருடத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஒரு அளவே இல்லாமல் போய் கொண்டிருக்கிறது.. ஏராளமான பெண்கள் பலாத்காரம் செய்வது என்பது போய், அவர்களை உயிரோடு கொளுத்தி தீ வைப்பது என்ற பயங்கரமும் அங்கு நடந்து வருகிறது.

விஷால் சரோஜ்
இப்போது இன்னொரு சம்பவம் நடந்துள்ளது.கல்யாணம் ஆன பெண்ணை.. கடத்தி பம்ப்செட்டுக்குள் அடைத்து வைத்து 5 நாளும் பலாத்காரம் செய்துள்ளனர் கொடூரர்கள்! படோஹி என்ற மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார் அந்த பெண்.. 18 வயதான அவருக்கு 3 மாதத்துக்கு முன்புதான் கல்யாணம் ஆனது. அதே கிராமத்தை சேர்ந்த விஷால் சரோஜ் என்பவர், 5 நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணின் மாமியார் வீட்டிற்கு வந்திருக்கிறார்.

அடைத்து வைத்தார்
பெண்ணின் அப்பாவுக்கு உடம்பு சரியில்லை.. உடனே கூட்டி வர சொன்னார்கள் என்று பொய் சொல்லவும், மாமியாரும் புது மருமகளை அனுப்பி வைத்தார். அப்பாவுக்கு என்ன ஆச்சோ என்று பதறியபடியே சென்ற, அந்த பெண்ணை இளைஞர் கடத்திவிட்டார்.. ஒரு பம்ப்பெட் அறையில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.. மொத்தம் 5 நாள் அந்த பெண்ணை அடைத்து வைத்து சீரழித்துள்ளார்.

பம்ப்செட்
இதனிடையே, சம்மந்திக்கு உடல்நிலையை விசாரிக்க மாமியார் பெண்ணின் வீட்டிற்கு சென்றார். அப்போதுதான் மகள் வரவில்லை என்று அவர்கள் சொன்னார்கள்.. உடனடியாக போலீசுக்கும் தகவல் சொன்னார்கள். அதனடிப்படையில் விசரணை மேற்கொண்ட போலீசார், சரோஜுக்கு சொந்தமான விவசாய நிலத்தில், பம்ப்செட்டில் அடைக்கப்பட்டிருந்த பெண்ணை மீட்டனர்.

பரிசோதனை
அந்த பரந்து விரிந்த நிலத்தின் நடுவில் உள்ளது பம்ப்செட் அறை.. மேலோட்டமாக பார்த்தால் யாருக்குமே சந்தேகம் வராது.. இப்போது சரோஜ் கைதாகி உள்ளார்.. அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.. பாதிக்கப்பட்ட பெண்ணையும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் உத்திர பிரதேச மாநிலத்தை அதிர வைத்துள்ளது.. தொடர்ந்து நடந்து வரும் பாலியல் அட்டூழியங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications