உ.பியில் பாஜக, காங்கிரசை வீழ்த்த உருவானது கூட்டணி.. நாளை அறிவிக்கும் மாயாவதி, அகிலேஷ்
லக்னோ:லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி அறிவிப்பை உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியும், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும் நாளை கூட்டாக அறிவிக்கின்றனர்.
வரவிருக்கும் லோக்சபா தேர்தலின் போது அகிலேஷின் சமாஜ்வாதியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதை உறுதிப்படுத்தும் விதமாக நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் இரு கட்சிகளும் தேர்தலுக்கு பின்னர் காங்கிரசை ஆதரித்தன.

ஆனால் இரு கட்சி உறுப்பினர்களுக்கும் அமைச்சரவையில் பொறுப்பு ஏதும் வழங்கப்படாததால் அக்கட்சியின் தலைமை கடும் அதிருப்தியில் இருந்தது. மத்தியபிரதேசம், ராஜஸ்தான் அரசுகளுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக மிரட்டல் விடுத்தார். டுவிட்டரில் அகிலேஷ் யாதவ்வும் தனது அதிருப்தியை வெளிப்படையாகவே கூறினார்.
அதேநேரம் நாட்டை ஆளும் கூட்டணியை தீர்மானிக்கும் முக்கிய தேர்தல் களமாக உத்தரப்பிரதேசத்தின் லோக்சபா தொகுதிகள் உள்ளன. இங்கு இருக்கும் 80 தொகுதிகளில் பெரும்பான்மை பெறும் கட்சிக்கு மத்தியில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பிரகாசமாக அமையும்.
இந்த நிலையில், இங்கு எதிரிக் கட்சிகளாக இருக்கும் சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜூம் கூட்டணி அமைக்க முன்வந்துள்ளதாக தெரிகிறது.இதுதொடர்பாக உத்தரப்பிரதேசத்தில் செல்வாக்கு மிக்க கட்சிகளாக விளங்கும் சமாஜ்வாதியின் தலைவர் அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் இரு கட்சி தலைவர்களும் கடந்த வாரம் டெல்லியில் சந்திப்பு நடத்தினர்.
அப்போதே கூட்டணி ஏற்பட்டுவிட்டதாகவும், தொகுதிகள் உடன்பாடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் நாளை இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்திக்கின்றனர்.
அப்போது லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரு கட்சிகளும் உத்தரப்பிரதேசத்தில் கூட்டணி வைத்தால், அது காங்கிரசுக்கு பேரிழப்பாக அமையும் என்று கூறப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications