67,504 வாக்குகள் வித்தியாசத்தில் அகிலேஷ் யாதவ் வெற்றி.. ஆனால் ஆட்சியைப் பிடிக்கத் தவறிய சமாஜ்வாதி
லக்னோ: நடந்து முடிந்த தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் வெற்றிபெற்றுள்ளார். ஆனால் சமாஜ்வாதி கட்சி தோல்வியைத் தழுவி இருக்கிறது.
உத்தரப்பிரதேச தேர்தலை மிக முக்கியமாக இந்தியாவே உற்று நோக்கிவருகிறது. அடுத்து நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான 'செமி பைனல்' ஆக கட்சிகள் கருதியது. உத்தரப்பிரதேச தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.
எதிர்பார்த்ததுபோலவே, உத்தரப்பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறது. சமாஜ்வாதி கட்சி அதற்கு அடுத்த இடத்தில் இருக்கிறது. விவசாயிகள் போராட்டம், லக்கிம்பூர் சம்பவம் எல்லாம் பாஜகவுக்கு எதிராக பார்க்கப்பட்டது, ஆனாலும் பாஜக மிகப்பெரிய வெற்றியை பெற்றுவருகிறது.

உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலை பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தனித்து தேர்தலை சந்தித்தது. இந்தத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. இதில் பாஜக 274 இடத்திலும், சமாஜ்வாதி 124 இடத்திலும், காங்கிரஸ் 2 இடத்திலும், பகுஜன் சமாஜ் 1 இடத்திலும் முன்னிலையில் இருக்கின்றன.

அகிலேஷ் யாதவ்
இந்த தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், கர்ஹால் தொகுதியில் போட்டியிட்டார். சமாஜ்வாதி கட்சிக்கு மிகுந்த ஆதரவு உள்ள கர்ஹாலில், அகிலேஷ் யாதவ் 67,504 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியில் மத்திய அமைச்சர் எஸ்.பி. சிங் பகேல் தோல்வியடைந்தார்.

சமாஜ்வாதி
2017 தேர்தலில் தோல்வியடைந்த சமாஜ்வாதி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் பிரசாரத்தில் ஈடுபட்டது. ஆனாலும் 124 இடங்களில் மட்டுமே வெற்றியை நெருங்க முடிந்தது. கடந்த தேர்தலைக்காட்டிலும் இந்த தேர்தலில் வெற்றி பெற்ற இடங்கள் அதிகம் என்றாலும், ஒட்டுமொத்த வெற்றியைப் பெறாமல் ஆட்சியைப் பிடிக்கமுடியாமல் போனது. இதனால் சமாஜ்வாதி கட்சி வருத்தத்தில் இருக்கிறது.

கூட்டணி
இந்த தேர்தலில் பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் என உத்தரப்பிரதேசத்தின் முக்கிய கட்சிகள் தனித்தனியாக களம் இறங்கின. இது பாஜகவுக்கு கூடுதல் பலமாக அமைந்தது. இந்த மூன்று கட்சிகளும் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற போராடியது. தனித்தனியாக போராடியதால் மூன்று கட்சிகளும் தோல்வியடைந்தது. கூட்டணி அமைத்திருந்தால், பாஜகவுக்கு கடும் போட்டி

ஒபிசி
பாஜக இந்த தேர்தலில் வளர்ச்சி, அமைதி என்று பிரசாரம் செய்தது. சமாஜ்வாதி கட்சியை குண்டர்கள் கட்சி என்றது. பாஜக ஆட்சிக்கு வந்ததும், உத்தரப்பிரதேசத்தில் அமைதி நிலவுவதாக கூறி பிரசாரம் செய்தது. ஆனால் சமாஜ்வாதி ஓபிசி வாக்குகளைப் பெற விரும்பியது. 2017 தேர்தலில் யாதவர்கள் தவிர மற்ற ஒபிசி ஓட்டுகள் பாஜகவுக்கு போனதுதான் காரணம் என, பாஜகவில் இருந்த ஒபிசி தலைவர்களை தேர்தலுக்கு முன் சமாஜ்வாதிக்குள் இழுத்தது.

குடும்பக் கட்சி
சமாஜ்வாதி கட்சியை குடும்பக் கட்சி என்று தொடர்ந்து குற்றம் சாட்டியது பாஜக. அதனால் தன்னுடைய குடும்ப உறவுகளுக்கு சீட் கொடுப்பதை குறைத்தார். இதையடுத்து, முலாயம்சிங்கின் மருமகள் அபர்ணா யாதவ், சீட் மறுக்கப்பட்டதால் பாஜகவில் இணைந்தார். அகிலேஷ் யாதவ் தவிர வேறு ஸ்டார் பேச்சாளர்கள் இல்லாததால், சமாஜ்வாதியின் பிரசாரம் சுவாரஸ்யமாக இல்லாமல் இருந்தது. ஆனால் யோகி, ராஜ்நாத்சிங், அமித்ஷா, மோடி என பல ஸ்டார் பேச்சாளர்களால் பாஜக பிரசாரம் களைகட்டியது. இதுபோன்ற பல விஷயங்களால் சமாஜ்வாதி மீண்டும் ஒருமுறை தோல்வியைத் தழுவி இருக்கிறது.












Click it and Unblock the Notifications