உபி தேர்தல்.. லக்கிம்பூர் கேரியில் உச்சக்கட்ட போலீஸ் பாதுகாப்பு! வாக்களித்தார் அமைச்சர் அஜஸ் மிஸ்ரா
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், விவசாயிகள் போராட்டத்தில் சர்ச்சையான லக்கிம்பூரில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 7 கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு மொத்தம் 403 தொகுதிகள் உள்ள நிலையில், ஆட்சி அமைக்க ஒரு கட்சி குறைந்தது 202 தொகுதிகளில் வெல்ல வேண்டும்.
உ.பி-இல் தற்போது யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சியில் உள்ளது. அங்கு எப்படியாவது மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக களமிறங்கியுள்ளது.

உத்தரப் பிரதேசம்
இதற்காக அக்கட்சியின் அனைத்து முக்கிய தலைவர்களும் உத்தரப் பிரதேசத்தில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். குறிப்பாக, பிரதமர் மோடியே உத்தரப் பிரதேச தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பு இருந்தே, அங்குச் சென்று பல்வேறு திட்டங்களைப் பிரதமர் மோடி நேரடியாகத் தொடங்கி வைத்தார். இருப்பினும், உத்தரப் பிரதேசத்தில் இந்த முறை பாஜகவுக்கும் சமாஜ்வாடி கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் எனக் கூறப்படுகிறது.

லக்கிம்பூர் சம்பவம்
குறிப்பாக, விவசாய சட்டங்கள் காரணமாகவும் விவசாயிகள் போராட்டத்தை பாஜக கையாண்ட விதத்திலும் அங்குள்ள விவசாயிகள் பாஜக மீது கடும் கோபத்தில் உள்ளனர். அதிலும் லக்கிம்பூர் கேரியில், மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் விவசாயிகள் மீது காரை மோதியதாக விவசாயிகள் கூறுகின்றனர். இச்சம்பவத்திற்காக அஜய் மிஸ்ராவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என விவசாய அமைப்புகள் வலியுறுத்திய போதிலும், அவர் அமைச்சரவையில் தொடர்கிறார். இதுவும் கூட விவசாயிகளுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அஜய் மிஸ்ரா
லக்கிம்பூர் கேரி விவகாரத்தில் மொத்தம் நான்கு விவசாயிகள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கூட நீண்ட நாட்களுக்குப் பின்னரே கைது செய்யப்பட்டார். சில வாரங்கள் சிறையில் இருந்த அவருக்கு, நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், கடந்த வாரம் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இது லக்கிம்பூர் பகுதி மக்களை ஆத்திரப்படுத்தியது.

பல முனை போட்டி
இதனிடையே உத்தரப் பிரதேசத்தில் இன்று 4ஆம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இதில் லக்கிம்பூர் தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. அங்கு இப்போது பல முனை போட்டி நிலவுகிறது. லக்கிம்பூர் தொகுதியில் பாஜக சார்பில் யோகேஷ் வர்மா மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சமாஜ்வாதியின் வர்மா மதுர், பகுஜன் சமாஜ் கட்சியின் மோகன் பாஜ்பாய் களமிறங்குகின்றனர். இவர்களைத் தவிரவும் காங்கிரஸ், மஜ்லீஸ், ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட கட்சிகளும் அங்குக் களத்தில் உள்ளன.

வாக்களித்தார் அஜய் மிஸ்ரா
மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவுக்கு லக்கிம்பூர் தொகுதியில் தான் வாக்கு உள்ளது. இதனிடையே இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் அஜய் மிஸ்ரா வாக்களித்தார். தேர்தல் காரணமாக லக்கிம்பூர் முழுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 104 கம்பெனி சிஏபிஎஃப் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட எஸ்பி சஞ்சீவ் சுமன் தெரிவித்தார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications