விவாகரத்தான பெண்ணுக்கு வந்த கோபம்.. காதலன் மீது ஆசீட் ஊற்றி வெறிச்செயல்.. திடுக்கிட வைக்கும் காரணம்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் திருமணமாகி விவாகரத்தான பெண்ணுடன் 12 ஆண்டுகளாக மிரட்டிய காதலன் மீது கோபமடைந்த பெண் ஒருவர் ஆசீட் ஊற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆசீட் வீச்சில் காயமடைந்த காதலன் தலைமறைவான நிலையில் அந்த பெண் காயமடைந்து சிகிச்சையில் உள்ளார். இதுபற்றி தற்போது திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அலிகார் பகுதியை சேர்ந்தவர் வர்ஷா. திருமணமாகி குழந்தை உள்ளது. தற்போது விவாகரத்து பெற்று குழந்தையுடன் வசித்து வருகிறார். இவர் நேற்று அலிகார் பகுதியில் உள்ள ரெஸ்டாரண்ட்டுக்கு சென்றார்.

அடுத்த 5வது நிமிடத்தில் ஆண் ஒருவர் அங்கு வந்தார். அவரது பெயர் விவேக். ரெஸ்டாரண்ட் ஊழியர் அவர்களிடம் என்ன சாப்பிடுகிறீர்கள்? என்று கேட்டார். இருவரும் தோசை ஆர்டர் செய்தனர். சப்ளையர் தோசை எடுக்க சென்றார்.
இந்த வேளையில் திடீரென்று வர்ஷா - விவேக் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. திடீரென்று ஆத்திரமடைந்த வர்ஷா தனது பேக்கில் வைத்திருந்த ஆசீட்டை எடுத்து விவேக் மீது ஊற்றினார். இதில் காயமடைந்த அவர் தனது சட்டையை கழற்றியபடி ரெஸ்டாரண்ட்டில் இருந்து ஓடினார். மேலும் வர்ஷாவின் உடலிலும் ஆசீட் பட்டது. இதனால் அவரும் காயமடைந்து இருக்கையில் அப்படியே இருந்தார்.
இதனை கவனித்த சப்ளையர் உடனடியாக மேனேஜரிடம் தகவல் தெரிவித்தார். மேனேஜர் வர்ஷாவிடம் விசாரித்தார். அப்போது வர்ஷா ‛‛நான் விவாகரத்து ஆனவர். அவர் என்னை ஏமாற்றினார். திருமணம் செய்வதாக கூறி தொடர்ந்த பணம் கேட்டு மிரட்டி வருகிறார். இதனால் கோபத்தில் ஆசீட் ஊற்றிவிட்டேன்'' என்றார். இதையடுத்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து வர்ஷாவை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுபற்றி உதவி போலீஸ் கமிஷனர் மயாங்க் பதாக் கூறுகையில், ‛‛ரெஸ்டாரண்ட்டில் நடந்த ஆசீட் ஊற்றிய சம்பவத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் நன்கு பரீட்சயமானவர்கள். அவர்கள் 2 பேருக்கும் இடையே நடந்த பிரச்சனையில் ஆசீட் வீச்சு நடந்துள்ளது. தற்போது முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டு வருகிறோம்.
முதற்கட்ட விசாரணை என்பதால் இருவருக்கும் என்ன மாதிரியான உறவு? என்பது உள்ளிட்ட விஷயங்களை இப்போதே சொல்லி விட முடியாது. இருதரப்பையும் அழைத்து விசாரித்த பிறகு தான் சரியான காரணம் தெரியவரும்'' என்றார். இந்த சம்பவம் குறித்து இன்னும் போலீசில் வர்ஷா மற்றும் விவேக் தரப்பில் புகார் அளிக்கப்படவில்லை. இருப்பினும் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications