‛ரெக்கார்ட்’.. சாதித்து காட்டிய உத்தர பிரதேசம்.. ஒரே நாளில் 1 லட்சம் ஆயுஷ்மான் கார்டு வழங்கல்
லக்னோ: மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான மத்திய அரசு புதிய சாதனையை படைத்துள்ளது.
மத்திய அரசு சார்பில் ஆயுஷ்மான் பாரத் என்ற பெயரில் மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ உதவிகள் கிடைப்பதற்கான திட்டம் இதுவாகும்.

இந்த திட்டத்தின் கீழ் தற்போது 10 கோடி குடும்பங்களை சேர்ந்த 50 கோடி பயனாளிகள் உள்ளனர். அதாவது ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்கான கார்டு பெற்றிருப்போர் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு பெற முடியும். இதன்மூலம் இந்தியாவில் ஏராளமானவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் ஆயுஷ்மான் பிரசாரத்தின் கீழ் 4 நாட்களில் 5 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு அந்த கார்டு வழங்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் அக்கவுண்ட் (ABHA) உருவாக்கி உள்ளனர். இந்நிலையில் தான் ஆயுஷ்மான் திட்டத்தில் உத்தர பிரதேச மாநிலம் புதிய சாதனை படைத்துள்ளது.
அதாவது கடந்த 21ம் தேதி மட்டும் உத்தர பிரதேசத்தில் 1 லட்சம் பேருக்கு ஆயுஷ்மான் திட்டத்துக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் ஒரு லட்சம் பேருக்கு அடையாள அட்டை வழங்குவது என்பது மிகப்பெரிய சாதனையாகும். இந்நிலையில் தான் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தர பிரதேச ஆட்சிக்கு மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உத்தர பிரதேச மாநில அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‛‛செப்டம்பர் 21ம் தேதி 1.5 லட்சம் கார்டுகள் நாடு முழுவதும் வழங்கி உள்ளது. இதில் ஒரு லட்சம் கார்டுகள் உத்தரபிரதேசத்தில் வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமைியலான இந்த அரசு மருத்துவ உதவிகளுக்கான நலத்திட்ட உதவிகளுக்கான பணிகளை செய்து வருகிறது. அதற்கு இநதுவே சாட்சி. அதோடு ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் ஹெல்த் மிஷன் திட்டத்தின் மொத்த இந்தியாவில் உத்தர பிரதேசம் நன்றாக செயல்பட்டு வருகிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வரும் 26ம் தேதி டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா உத்தரபிரதேச அரசை பாராட்ட உள்ளார். டெல்லியில் 2 நாட்கள் நடக்கும் ஆரோக்கிய மந்தன் நிகழ்ச்சியின்போது இந்த பாராட்டு வழங்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications