நீரில் மூழ்கி பலியாவதை தடுக்க சிறப்பு திட்டம்.. யோகியின் மெகா பிளான்.. எப்படி செயல்படும் தெரியுமா?
லக்னோ: உத்தர பிரதேசத்தில் வெள்ளம் மற்றும் திருவிழா காலங்களில் நீர்நிலைகளில் மூழ்கி மக்கள் பலியாவதை குறைக்கும் வகையில் சிறப்பு திட்டத்தை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வகுத்து செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளார். அது என்ன? அந்த திட்டம் எப்படி செயல்படுத்தப்பட உள்ளது என்பதை வாங்க பார்க்கலாம்.
உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. 2வது முறையாக யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். உத்தர பிரதேசத்தை பொறுத்தமட்டில் ஏராளமான ஆன்மிக இடங்கள் உள்ளன. அங்கு பக்தர்கள் நீராடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

மேலும் ஆற்றில் அதிகளவு தண்ணீர் வரும்போது பலரும் அதில் குளிக்க ஆர்வம் காட்டுகின்றனர். இந்த வேளையில் சிலர் தண்ணீரில் சிக்கி பலியாகி வருகின்றனர். இந்நிலையில் தான் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்போரின் எண்ணிக்கையை குறைக்க யோகி ஆதித்யநாத் முடிவு செய்துள்ளார்.
இதற்காக உத்தர பிரதேச அரசு திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. இந்த திட்டத்துக்கு ‛முதல் அமைச்சர் பால் ரன்வீர் யோஜனா' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் நோக்கம் என்பது மாநிலத்தில் தண்ணீரில் மூழ்கி பலியாகும் நபர்களின் எண்ணிக்கையை 20 சதவீதம் அளவுக்கு குறைப்பதாகும்.

இந்த திட்டம் என்பது உத்தர பிரதேச மாநில பேரிடர் மற்றும் நிவாரண துறையின் சார்பில் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி பேரிடர் மீட்பு மற்றும் நிவாரண பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது. அதாவது நீரில் மூழ்கி பொதுமக்கள் இறப்பதை தடுப்பதற்கு தேவையான பயிற்சி மற்றும் விழிப்புணர்வு வழங்கப்பட இருக்கிறது.
இந்த திட்டத்தின் கீழ் என்டிஆர்எப், எஸ்டிஆர்எப் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இந்த திட்டத்தில் பயிற்சி பெறும் வீரர்கள் 120 ‛ஆபடா மித்ராக்கள்' எனும் குழுவாக உருவாக்கப்பட உள்ளனர். அதன்பிறகு இவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் இடங்கள் மற்றும் திருவிழா காலங்களில் நீர்நிலைகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர்.
இதுதவிர வெள்ளம் அதிகம் இருக்கும் பகுதிகளில் மக்களை நெருங்க விடுாமல் தடுப்பது, எச்சரிக்கை பலகை வைப்பது, சுழற்சி முறையில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும் பணியையும் இவர்கள் மேற்கொள்வார்கள். இதன்மூலம் மாநிலத்தில் தண்ணீரில் மூழ்கி பலியாகும் நபர்களின் எண்ணிக்கை என்பது கணிசமாக குறையும் என பேரிடர் மீட்பு மற்றும் நிவாரண துறையின் கமிஷனர் ஜிஎஸ் நவீன் குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications