Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இளைஞரை சுற்றி வளைத்து மிதித்த போலீஸ்.. அரை மணி நேரத்தில் வாயில் நுரை தள்ளி மரணம்! உ.பி-இல் ஷாக்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் கூலித் தொழிலாளி ஒருவரை போலீசார் மிகக் கடுமையாகத் தாக்கியதில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நமது நாட்டில் போலீசார் பொதுமக்களிடம் அத்துமீறும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. லாக்அப்களில் போலீசார் விதிகளைப் புறந்தள்ளி கொடூரமாகத் தாக்குவதில் சில நேரங்களில் உயிரிழப்பு சம்பவங்களும் கூட நடக்கிறது.

அப்படியொரு மிக மோசமான சம்பவம் தான் இப்போது உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது. இங்கே 28 வயது இளைஞனை போலீசார் கொடூரமாகத் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

 Uttar Pradesh police beats a Man mercilessly and he died within 30 minutes

உத்தரப் பிரதேசம்: போலீசார் அவரிடம் கொடூரமாக நடந்து கொண்டதாகவும் லத்தியைக் கொண்டு மிக மோசமாகத் தாக்கி 3rd டிகிரி டிரீட்மென்ட் கொடுத்ததாகவும் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இருப்பினும், போலீசார் தங்கள் மீதான குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். தங்கள் இளைஞனை விடுவிக்கும் போது எதுவும் நடக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர். அதேநேரம் இந்தச் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே போலீசார் ஒருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

மேற்கு உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தின் ரதௌல் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகச் சொல்லி போலீசார் அவரை கைது செய்துள்ளனர். அவனை போலீசார் கொடூரமாகத் தாக்கியதாகவும் கூறுகின்றனர். இதில் படுகாயமடைந்த அந்த இளைஞன் சிறையில் இருந்து வெளியே வந்து அரை மணி நேரத்தில் உயிரிழந்ததாகவும் உறவினர்கள் கூறுகின்றனர்.

உயிரிழப்பு: உயிரிழந்த அந்த நபர் சஜித் அப்பாசி என்ற 28 வயது இளைஞர் என்று தெரிய வந்துள்ளது. அந்த நபர் சூதாடிக் கொண்டிருந்ததாகக் கருதி போலீசார் அவரை பிடித்துச் சென்றனர். அவரிடம் சில மணி நேரம் விசாரணை நடத்தினர். இருப்பினும், அருக்கு எதிராக எந்தவொரு ஆதாரமும் கிடைக்காத நிலையில், அவரை போலீசார் விடுவித்தனர். இருப்பினும், அவர் வெளியே வந்து அரை மணி நேரத்தில் உயிரிழந்துள்ளார்.

போலீசார் சோதனை சாவடியிலேயே வைத்து தனது மகனை மிக மோசமாகத் தாக்கியதாகத் தெரிவித்த சஜித்தின் தந்தை பாபு அப்பாசி, இதனால் அவர் படுகாயமடைந்ததாகவும் இதுவே அவர் உயிரிழக்கக் காரணம் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர். போலீசார் அவரை விடுவித்த உடன் சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் இருப்பினும் சிகிச்சை பலனில்லாமல் தனது மகன் உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 Uttar Pradesh police beats a Man mercilessly and he died within 30 minutes

கொடூர தாக்குதல்: மூன்று போலீஸ் கான்ஸ்டபிள்கள் அவரை இரக்கமின்றி சுற்றி வளைத்துத் தாக்குவதை அந்த கிராமத்தில் இருக்கும் கிராம மக்களும் பார்த்துள்ளனர். இதற்கிடையே அந்த இளைஞரை உயிரிழந்த தகவல் தெரிந்ததும் ஆத்திரமடைந்த கிராம மக்கள், கொடூரமாகத் தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி அர்பித் விஜயவர்கியா உறுதியளித்த நிலையில், அதன் பின்னரே பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டனர்.

அந்த இளைஞரின் குடும்பத்தினர் எந்த புகாரும் தரவில்லை என்பதால் வழக்குப்பதிவு செய்யவில்லை என்றும் இருப்பினும் இதில் என்ன நடந்தது என்பதைக் கண்டறிய ஏற்கனவே விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூடுதல் எஸ்பி மணிஷ் குமார் தெரிவித்தார். இளைஞரின் உடல் பிரேதப் பரிசோதனை அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னரே உயிரிழப்பிற்கான காரணம் தெரிய வரும் என்றும் அவர் தெரிவித்தனர்.

இது குறித்து சஜித்தின் உறவினர் கூறுகையில், "எனது சகோதரனுக்குச் சூதாடும் பழக்கம் இல்லை. அங்கே சிலர் சீட்டாடிக் கொண்டிருந்த நிலையில், அருகில் மட்டும் இவர் நின்று கொண்டிருந்தார். இவரும் சூதாடியதாக நினைத்து மூன்று கான்ஸ்டபிள்கள் அவரை கொடூரமாகத் தாக்கியுள்ளனர். அதன் பிறகு அவரால் சரியாக நிற்கக் கூட முடியவில்லை. அவரது வாயிலிருந்து நுரை வர ஆரம்பித்ததும், அதன் பின்னர் சில நிமிடங்களிலேயே அவர் உயிரிழந்தார்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+