"மாமியார்".. ஏதோ தப்பா இருக்கே.. கிச்சனில் மகன்.. கட்டிலில் மருமகள் குறட்டை... டக்கென வந்த ராதிகா.. ஆ
லக்னோ: மாமியார் வீட்டு பக்கமே, மகன் சாய்ந்துவிட்டாராம்.. இதுதான் ஒரு கொலை வரை சென்று பயங்கரத்தை கிளப்பிவிட்டுள்ளது. என்ன நடந்தது உபியில்?
உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டம் கஜ்ரெளலாவை சேர்ந்தவர் அமித்குமார்... இவர் கோமல் என்ற பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்து வந்தார்.. இந்த காதல் விவகாரத்தை இரு வீட்டினரும் ஏற்றுக்கொண்டனர்.
இதையடுத்து, கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு, கோமல் - அமித்குமார் திருமணம் நடந்தது... பிறகு, மாமனார், மாமியார் என கணவரின் குடும்பத்தாருடன் கூட்டுகுடும்பமாக கோமல் வாழ்ந்து வந்தார்..

மாமியார்: ஆனால், கல்யாணம் ஆனதுமே அமித்குமார் மாறிவிட்டாராம். இது அமித்குமாரின் அம்மா ராதிகா தேவிக்கு கடுப்பை தந்து வந்துள்ளது.. மாமியார் வீட்டுப்பக்கம் மகன் சாய்ந்துவிட்டதால், மருமகள் கோமல் மீது இனம்புரியாத வெறுப்பும் ராதிகாவுக்கு இருந்து வந்துள்ளது.. இதனால், கோமலை வீட்டு வேலைகளை செய்ய சொல்லி கொடுமைப்படுத்தியும், அடிக்கடி வரதட்சணை கேட்டும் சித்ரவதை செய்தும் வந்ததாக கூறப்படுகிறது..
ஒருகட்டத்தில் இதையெல்லாம் பொறுக்க முடியாமல், கணவன் அமித்குமாரை அழைத்துக்கொண்டு கோமல் தனிக்குடித்தனம் சென்றுவிட்டார். கஜ்ரௌலாவின் கங்காநகரில், மொஹல்லா என்ற பகுதியில் இவர்கள் தனிக்குடித்தனம் நடத்தி வந்திருக்கிறார்கள்.. ராதிகாவுக்கு இது இன்னும் ஆத்திரத்தை கூட்டியது.. அப்போதும்கூட, கோமலை மறைமுகமாக நோட்டமிட்டே வந்தாராம் ராதிகா..
இளஞ்ஜோடிகள்: இதனிடையே, கங்காநகரில் தனிக்குடித்தனம் செய்து கொண்டிருக்கும் கோமல் குறித்து சில தகவல்கள், ராதிகாவுக்கு வந்துள்ளது.. அதாவது, அமித்குமாரை தன் கைப்பிடிக்குள் வைத்து கோமல் இயக்கி வருவதாகவும், மொத்த வீட்டு வேலைகளையும் கணவனையே செய்ய சொல்வதாகவும், எப்ப பார்த்தாலும், கோமல் வீட்டு நபர்கள் அந்த வீட்டுக்கு வந்து செல்வதாகவும், மாமியார் காதுக்கு "வதந்திகள்" எட்டியுள்ளன..
அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் இந்த விஷயத்தையெல்லாம் ராதிகாவுக்கு போட்டு தந்திருப்பதாக தெரிகிறது.. ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த ராதிகா, இதைக்கேள்விப்பட்டு, அதற்கு மேல் ஆவேசமாகிவிட்டார். இப்படியே விட்டால், தன் மகன், தன்னைவிட்டு முழுமையாக சென்றுவிடுவான் என்று பயந்துபோன ராதிகா, மகனுக்கு இன்னொரு கல்யாணம் செய்து வைக்க முடிவு செய்தார்.. இதற்காக பெண்ணையும் பார்க்க ஆரம்பித்துவிட்டடார்.
மாஸ்டர் பிளான்: ஆனால், கோமல் இருக்கும்வரை, மகனுக்கு கல்யாணம் செய்து வைக்க முடியாது என்று நினைத்த ராதிகா, கோமலை தீர்த்து கட்டவும் பிளான் செய்துள்ளார்..
இதற்காக சம்பவத்தன்று, மகன் வீட்டிற்கு முதன்முதலாக கிளம்பி போனார் ராதிகா.. அப்போது அவரது மகன் அமித்குமார், நிஜமாகவே வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தார்.. மருமகள் கோமல், தூங்கி கொண்டிருந்தார்.. இதை பார்த்ததும் கொந்தளித்த ராதிகா, கையோடு கொண்டு சென்றிருந்த துப்பாக்கியை எடுத்து, தூங்கி கொண்டிருந்த கோமலை சுட்டு பொசுக்கிவிட்டார்.. அதே இடத்தில் சுருண்டு விழுந்து பலியானார் கோமல்.
கோமல் அம்மா: இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கோமலின் அம்மா, நேராக போலீசுக்கு போய் ராதிகா மீது புகார் தந்தார்.. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கோமலின் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர்..
இப்போது, வரதட்சணை கொடுமை பெயரில் கோமலின் கணவர் அமித்குமார், மாமியார் ராதிகா, மாமனார் நரேந்திர சிங் என 3 பேரையுமே போலீசார் கைது செய்து, சிறையில் வைத்துள்ளது.. தூங்கி கொண்டிருந்த மருமகளை, மாமியார் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை உத்தரபிரதேசத்தில் ஏற்படுத்தி வருகிறது.
சரியா? தவறா: வீட்டிலுள்ள எல்லா வேலைகளையும் மகனை வைத்தே மருமகள் செய்ய வைப்பதாக கேள்விப்பட்டதுமே, கோமல் வீட்டுக்கு ஏற்கனவே ஒருமுறை சென்றாராம் ராதிகா..
ஆனால், மாமியாரை வீட்டிற்குள் நுழைய தடை விதித்துவிட்டாராம்.. அதனால், தன் வீட்டுக்கு திரும்பிவந்துவிட்ட ராதிகா, கோமல் செயலால் கோபமடைந்து, அவரைக் கொல்ல திட்டம் தீட்டியிருக்கிறார்.. 2வது முறைதான், வீட்டிற்குள் நுழைந்து கோமலின் நெற்றியில் குறிபார்த்து சுட்டிருக்கிறார்.. அத்துடன், வீட்டையும் கொள்ளையடித்தது போல் காட்டுவதற்காக வீட்டையும் சூறையாடிவிட்டு கிளம்பினாராம் ராதிகா.. ஆனாலும், போலீசில் சிக்கி உள்ளார்.
சில இடங்களில், வீட்டு வேலைகளை செய்யும்படி மனைவிகள் தொந்தரவு தருவது இருக்கத்தான் செய்கிறது.. ஆனால், காதல் திருமணம் செய்து கொண்ட இளம்ஜோடிகள், தனிக்குடித்தனம் நடத்திவரும்போது, வீட்டு வேலைகளை ஒருவருக்கொருவர் பிரித்து கொள்வதும், ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வதும் என "புரிதல்கள்" தலைதூக்கி வருவது பலரையும் ஈர்த்து வருகிறது.. எனினும், மகன் வேலை செய்வதை பொறுக்க முடியாமல், மருமகளை சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications