மனைவிக்கு டெலிவரி.. செலவுக்கு மகனை "தூக்கிய" கணவர்.. விரட்டி விரட்டி வாட்டியெடுத்த வறுமை.. கொடுமை
லக்னோ: வறுமையின் துயரம் உச்சக்கட்ட கொடுமையில் போய் நிறுத்திவிடுகிறது.. மனைவிக்கு பிரசவம் முடிந்த கையோடு, கணவன் செய்த காரியம் பலரையும் பதற செய்துள்ளது.
சிகிச்சைக்கு போதுமான பணம் இல்லாத காரணத்தினால், தவறான முடிவுகளை எடுக்கும் நபர்கள் ஏராளம் உண்டு.. ஒருவர், தன்னுடைய மனைவிக்கு முதுகுத்தண்டில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக நீண்ட காலமாக சிகிச்சை தந்து வந்தார்.. ஆனால், ஒருகட்டத்தில், மனைவியின் சிகிச்சைக்கு கணவனால் அதிக பணம் செலவிட முடியவில்லை..

சிகிச்சைகள்: சிகிச்சைக்கான பொருளாதார நிலை இல்லாத காரணத்தினால், தம்பதியினர் இருவருமே கடும் விரக்தியில் இருந்தனர்.. கடைசியில் இருவருமே தற்கொலை செய்து கொண்டார்கள். கடந்த சுதந்திர தினத்தன்று இந்த சம்பவம் நடந்தது.
சில மாதங்களுக்கு முன்பு, கோவாவில்கூட இப்படி ஒரு துயரம் நடந்தது.. துக்காராம் என்ற கூலித்தொழிலாளிக்கு 46 வயதாகிறது.. அவருடைய மனைவி தான்விக்கு 44 வயதாகிறது.. தான்வி நீண்டநாட்களாக நோய்வாய்ப்பட்டு இருந்தார். அவருக்கு அடிக்கடி மருத்துவம் செய்ய வேண்டியது இருந்தது. ஆனால், துக்காராமிடம் போதிய பணவசதி இல்லை. இதனால் மனைவியை கொலை செய்ய முடிவு செய்தார்.
கொடுமை: அதன்படி, ஒரு கால்வாய் அருகில் அவரது மனைவியை அழைத்து சென்று உயிருடன் புதைத்துவிட்டார்.. அந்த மனைவி மண்ணோடு மண்ணாக இறந்துபோய்விட்டார். இறுதியில் துக்காராமை போலீசார் கைது செய்தனர்.
இதோ உத்தரபிரதேசத்தில் ஒரு துயரம் நடந்துள்ளது.. பர்வா பாட்டியை சேர்ந்தவர் ஹரீஸ் படேல்.. இவர் ஒரு கூலித்தொழிலாளி ஆவார்.. இவருக்கு ஏற்கனவே 5 குழந்தைகள் இருக்கிறார்கள்.. இப்போது அவரது மனைவிக்கு தனியார் மருத்துவமனையில் 6வது குழந்தை பிறந்துள்ளது.
கறார் ஊழியர்கள்: ஆனால், மருத்துவமனை சிகிச்சை கட்டணத்தை ஹரீஸ் படேலால் செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டது... பிரசவ சிகிச்சைக்கு உரிய பணத்தை கட்டாமல், மனைவியையும், பிறந்த குழந்தையையும் மருத்துவமனையிலிருந்து அனுப்ப முடியாது என்று மருத்துவ ஊழியர்களும் கறாராக சொல்லிவிட்டார்கள்.
இதனால், என்ன செய்வதென்றெ தெரியாமல் தவித்து நின்றார் ஹரீஸ் படேல்.. அப்போது, அவருடைய 3 வயது மகனை, குழந்தை இல்லாத தம்பதி யாருக்காவது விற்றுவிட்டால், மருத்துவமனையின் கட்டணத்தை செலுத்தி விடலாம் என்று அங்கிருந்த சிலர் ஹரீஷ் படேலுக்கு ஐடியா தந்தனர்.. இதற்கான அழுத்தத்தையும் தந்துள்ளனர்.. இதனால், வேறுவழியில்லாமல் தன்னுடைய 3வயது குழந்தையை விற்க ஹரீஸ் படேலும் சம்மதித்துள்ளார்.
5 பேர் கைது: இதற்காக போலா யாதவ் - கலாவதி என்ற தம்பதியினரிடம் பேசி, 3 வயது மகனை விற்பனை செய்ய, அமரீஸ் யாதவ் என்ற புரோக்கரும் முன்வந்தார். ஆனால், அதற்குள் இந்த விவகாரம் போலீசுக்கு தெரியவந்தது. இறுதியில், தரகர் அமரீஸ் யாதவ், குழந்தையை தத்தெடுக்க முயன்ற தம்பதிகள் போலா யாதவ் - கலாவதி, போலி மருத்துவர் தாரா குஷ்வாஹா, மருத்துவமனை உதவியாளர் சுகந்தி ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications