ஒலிம்பிக் பதக்கங்களை கங்கையில் வீசுவோம்! பாஜக எம்பி மீது நடவடிக்கை கோரி மல்யுத்த வீரர்கள் முழக்கம்
லக்னோ: பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக எம்பி மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், தாங்கள் பெற்ற ஒலிம்பிக் பதக்கங்களை கங்கை நதியில் வீசி எறிய உள்ளதாக வீரர்கள் கூறியுள்ளனர்.
லக்னோ தேசிய மல்யுத்த பயிற்சி முகாமில் பயிற்சி பெறும் வீராங்கனைகள் அங்குள்ள பயிற்சியாளர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாகவும், மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கால் 10க்கும் அதிகமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் குற்றம்சாட்டி உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற விக்னேஷ் போகத், சரிதா, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா, ஷாக்ஷி மாலிக் உட்பட சுமார் 30 வீரர்/வீராங்கனைகள் கடந்த ஜனவரியில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடக்கத்தில் அரசியல் கட்சியினரின் ஆதரவையும் இவர்கள் விரும்பவில்லை. இப்படி இருக்கையில், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் இவர்களின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதாகவும், விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் வாக்குறுதி கொடுத்திருந்தது. இதனையடுத்து வீரர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.
ஆனால் விளையாட்டுத்துறை அமைச்சகம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று மீண்டும் வீரர்கள்/வீராங்கனைகள் ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இந்த முறை அரசியல் கட்சிகள், விவசாயிகள் உள்ளிட்டோரின் ஆதரவுகளை கேட்டனர். மட்டுமல்லாது டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்த போது அவர்கள் இந்த புகாரை பதிவு செய்யாமல் இழுக்கடித்தனர். இதனையடுத்து வீரர்கள் நீதிமன்றத்தை அணுகினர். நீதிமன்றம் புகாரை பதிவு செய்ய வேண்டும் என்று கூறி உத்தரவிட்டது.
இதனையடுத்து மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக புகார் பதிவு செய்யப்பட்டது. ஆனால் இவர் தற்போது வரை கைது செய்யப்படவில்லை. எனவே இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என மல்யுத்த வீரர்கள்/வீராங்கனைகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடம் நேற்று முன்தினம் (மே.28) திறக்கப்பட்டது.

இதனையடுத்து, தங்களுடைய புகார் மீது மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாஜக எம்பியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் வளாகத்தில் மல்யுத்த வீரர்கள்/வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதனையடுத்து இவர்கள் மீது ஐபிசி பிரிவு 147, 149, 186, 188, 332, 353, PDPP சட்டத்தின் பிரிவு 3 ஆகியவற்றின் கீழ் டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நடவடிக்கை எடுக்காமல் தங்களுடைய எம்பியை பாஜக பாதுகாப்பதாக காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. நாட்டில் சர்வாதிகாரம் ஓங்குகிறதா? என மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் கேள்வியெழுப்பியிருந்தார்.
இந்நிலையில், டெல்லியின் ஜந்தர் மந்தரில் மீண்டும் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட மாட்டாது என டெல்லி போலீஸ் திட்டவட்டமாக கூறியிருந்தது. எனவே மல்யுத்த வீரர்கள் வேறு எந்த இடத்தில் போராட்டம் நடத்துவார்கள் என்பது குறித்து கேள்வி எழுந்தது. சூழல் இவ்வாறு இருக்க, தங்களுடைய ஒலிம்பிக் பதக்கங்களை புனிதமான கங்கை நதியில் இன்று மாலை 6 மணிக்கு வீசுவதாக ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகிய வீரர்கள் அறிவித்துள்ளனர்.
இது குறித்து டிவிட்டர் பக்கத்தில் மூன்று பக்க அறிக்கையை பஜ்ரங் புனியா வெளியிட்டுள்ளார். அதில், "வீராங்கனைகளை தங்கள் மகள் என அழைக்கும் பிரதமர் மோடி, அவர்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து எதையும் கேட்கவில்லை. நாங்கள் பாலியல் குற்றச்சாட்டு சம்பவத்தில் நீதி கோரியதை தவிர வேறு என்ன செய்தோம்? பிறகு ஏன் எங்களை குற்றவாளிகள் போல் நடத்துகிறீர்கள்? போராட்டக்களத்தில் நாங்கள் கைதானபோது எங்கள் புகைப்படங்கள் மார்ப்பிங் செய்து வெளியிடப்பட்டுள்ளது.
எங்கள் கோரிக்கைகளுக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் என யாரும் செவி சாய்க்கவில்லை. எங்கள் பதக்கங்களுக்கு எவ்வித மரியாதையும் இல்லை. இது எங்கள் புனிதமான உழைப்பின் மூலம் கிடைத்தது, எனவே நாங்கள் இன்று இந்த பதக்கங்களை புனிதமான கங்கை நதியில் தூக்கி எறிய போகிறோம்" என்று கூறியுள்ளார். ஒலிம்பிக் வீரர்கள் விடுத்துள்ள இந்த அறிக்கை பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications