மிக விரைவில் இரட்டிப்பாகும் விவசாயிகள் வருவாய்! யோகி அரசு கொண்டு வரும் புதிய திட்டம்! என்ன தெரியுமா
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் தினை உள்ளிட்ட தானியங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் முன்னோடி திட்டத்தைத் தொடங்க அயோத்தியை யோகி அரசு தேர்வு செய்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் நடந்து வரும் யோகி ஆத்தியநாத் அரசு மாநிலத்தில் வளர்ச்சி பணிகளை உறுதி செய்ய பல்வேறு திட்டங்களைச் செயல்பட்டு வருகிறது. அதன்படி அங்கே தானியங்களின் உற்பத்தி ஊக்குவிக்க புதிய திட்டத்தை அறிவிக்க உள்ளனர்.

இத்திட்டத்திற்கு சுமார் 100 கோடி ரூபாய் செலவழிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. ஆரோக்கியமான டயட்டிற்கு மக்கள் தங்கள் அன்றாட உணவில் தானியங்களைச் சேர்க்க வேண்டும் என்று உபி அரசு விரும்புகிறது. இதற்காக இத்திட்டத்தை முன்மொழிந்துள்ள உபி அரசு, இதற்காகத் தனியாக மானியங்களையும் அறிவிக்க உள்ளது.
விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்று உபி அரசு அறிவித்திருந்த நிலையில், அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இது உள்ளது.
கோதுமை மற்றும் நெல் போன்ற பிற பயிர்களுடன் ஒப்பிடுகையில், தானியங்களுக்குப் பாசனத்திற்குக் குறைந்த நீர் தேவைப்படுகிறது என்பது செலவுகளும் குறையும். இதன் மூலம் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும். சோளம், ஜோவர், தினை, பார்லி உள்ளிட்ட முக்கிய தானியங்களைப் பயிரிட உபி அரசு விவசாயிகளை ஊக்குவித்து வருகிறது.
இத்திட்டத்தை முதலில் தொடங்க அயோத்தி மாவட்டத்தில் சோஹாவால் மற்றும் புரா பஜார் பகுதிகளில் சுமார் 1,200 ஹெக்டேர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. விவசாயிகளுக்குத் தானியங்களைச் சாகுபடி செய்வதற்கான தொழில்நுட்ப ஆதரவை வழங்கவும் அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது.
மிக விரைவில் விவசாயிகளுக்குத் தரமான விதைகளும் அரசு சார்பில் வழங்கப்படும் என்று உபி அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications