வெளுத்து வாங்கும் கனமழை.. பம்பரமாய் சூழலும் முதல்வர் யோகி! மக்களின் பாதுகாப்பை உறுதி செய்த உ.பி அரசு

Subscribe to Oneindia Tamil

லக்னோ: தொடர்ந்த பெய்து வரும் கனமழை காரணமாக உத்தரப் பிரதேசத்தில் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், மீட்பு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

வட இந்தியாவில் குறிப்பாக உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர் நிலைகள் வேகமாக நிரம்பியுள்ளன. அதேபோல அணைகளும் நிரம்பியுள்ளதால் அதிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.

Yogi Adityanath has said that people have been protected from the effects of heavy rains in Uttar Pradesh

உத்தரப் பிரதேசத்தை பொறுத்த அளவில் காசியாபாத், மதுரா, நொய்டா போன்ற மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இங்கிருந்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மீட்டு செல்லும் பணியை பேரிடர் மீட்பு படையினர் மேற்கொண்டுள்ளனர். இது குறித்து பேசிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், "மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, உடை மற்றும் மருந்து பொருட்கள் போதுமான அளவு கையிருப்பு இருக்கிறது.

சஹாரன்பூர் மாவட்டம்தான் வெள்ளத்தால் கடுமையான பாதிப்புகளை சந்தித்திருக்கிறது. இம்மாவட்டத்தை நான் நேரில் சென்று பார்வையிட்டுள்ளேன். தேவையான அளவுக்கு எங்களிடம் பேரிடர் மீட்பு படையினர் இருக்கின்றனர். மேலும் வேண்டும் என்றாலும் மத்திய அரசு வழங்க தயாராக இருக்கிறது. எனவே இந்த வெள்ளத்தால் பெரிய அளவில் எங்களுக்கு பாதிப்பு ஏற்படாது" என்று கூறியுள்ளார். மழை தொடர்ந்து பெய்து வருவதால் வெள்ளம் வடிய ஒரு வாரம் வரை ஆகும் என்று சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+