பிரதமர் மோடியின் ஆட்சியில் உ.பி வளர்ச்சியை கண்டிருக்கிறது! முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியின் கீழ் உத்தரப் பிரதேசம் ஏராளமான பலன்களை பெற்றிருக்கிறது என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
இன்று உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ருத்ராக்ஷா சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மாநாட்டு மையத்தில் 2023ம் ஆண்டுக்கான இளைஞர் 20 உச்சி மாநாடு தொடங்கியது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் ஆகியோர் இந்த மாநாட்டை தொடங்கி வைத்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய யோகி ஆதித்யநாத், "பிரதமர் மோடியால் அதிக அளவில் பலனடைந்துள்ள மாநிலங்களில் உத்தரப் பிரதேசமும் ஒன்று. இந்த 9 ஆண்டுகளுக்கு பிறகு நாம் புதிய இந்தியாவை காணலாம்.

இந்த புதிய இந்தியாவுக்கு நான்கு தூண்கள் அடிப்படையானவை. நாட்டின் மரியாதை, உள் மற்றும் வெளி பாதுகாப்பு, ஏழைகளின் நலன் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவைதான் இந்த நான்கு தூண்கள். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உலக நாடுகள் மத்தியில் இந்தியா மீதான ஆர்வம் அதிகரித்திருக்கிறது. இந்தியா மேற்கொள்ளும் ஒவ்வொரு முடிவையும் உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன. நம் நாட்டின் மீதான அக்கறையும், மரியாதையும் பிரதமர் மோடி தலைமையின் கீழ் அதிகரித்திருக்கிறது.
அதேபோல நாட்டின் எல்லைகளும் பாதுகாப்பாக இருக்கின்றன. ஜம்மு & காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் அல்லது நக்சல் மற்றும் மாவோயிஸ்ட் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் என அனைத்து பகுதிகளும் பாதுகாப்பாக இருக்கின்றன. தீவிரவாதம், பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதத்தை அரசு வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளது. பாதுகாப்பு விஷயத்தில் நாட்டின் மீது புதிய நம்பிக்கை எழுந்திருக்கிறது. மறுபுறம் இந்தியா தனது 140 கோடி மக்களுக்கு தேவையான உள்கட்டமைப்புகளை சிறப்பாக மேம்படுத்தியுள்ளது.
சுதந்திரம் அடைந்த 70 ஆண்டுகளில், 74 விமான நிலையங்கள் மட்டுமே கட்டப்பட்டன, ஆனால் ஒன்பது ஆண்டுகளில் கூடுதலாக 74 கட்டப்பட்டுள்ளன. இது உட்கட்டமைப்பு எந்த அளவுக்கு சிறந்து விளங்குகிறது என்பதற்கு ஓர் உதாரணம். ஏழை மக்களுக்காக கொண்டுவரப்பட்ட ஜன்தன் யோஜனா திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 8.5 கோடி வங்கி கணக்குகள் உத்தரப் பிரதேசத்தில் தொடங்கப்பட்டுள்ளன" என்று கூறியுள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications