பெண் குழந்தைகளின் வளர்ச்சியில் உ.பி அரசு உறுதியாக இருக்கிறது.. முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வி மற்றும் வளர்ச்சி ஆகியவற்றில் தனது அரசு உறுதியாக உள்ளது. கோரக்பூரில் அனைத்து பெண்களையும் கொண்ட பிஏசி பட்டாலியன் விரைவில் நிறுவப்படும் என உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
மட்டுமல்லாது நமது மாநில காவல்துறையில் பெண்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் பாஜக ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது. ஒரு சமூகம் முன்னேற வேண்டும் எனில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைக்கப்பட வேண்டும். தற்போது பெண்களுக்கு எதிரான மிகப்பெரிய பிரச்னையாக வரதட்சணை இருக்கிறது. இந்த வரதட்சணையை ஒழிக்க வெகுஜன திருமணம் அவசியமாகிறது.

அதன்படி இன்று முக்யமந்திரி சமுஹிக் விவா யோஜனா திட்டத்தின் கீழ், 68 முஸ்லிம்கள் உட்பட 1,432 தம்பதிகள் திருமணம் செய்து வைக்கப்பட்டிருக்கிறது. எங்கு பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறதோ அங்குதான் வளர்ச்சி சாத்தியமாகும். உத்தரப் பிரதேசத்தில் பெண்களுக்கு உரிய அங்கீகாரமும், அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. எனவேதான் மாநிலத்தில் வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில், 2 லட்சம் ஜோடிகளுக்கு வெகுஜன திருமணம் நடத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
1947 முதல் 2017 வரை, உ.பி காவல்துறையில் பெண் பணியாளர்களின் எண்ணிக்கை 10,000 என்கிற அளவில்தான் இருந்தது. ஆனால் பாஜக ஆட்சி பொறுப்புக்கு வந்த பின்னர் இந்த எண்ணிக்கை 40 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அதேபோல வெகுஜன திருமணத்திற்காக கடந்த காலத்தில் ஒரு ஜோடிக்கு ரூ.31 ஆயிரம் ஒதுக்கப்பட்டது. ஆனால் பாஜக அரசு இந்த தொகையை ரூ.51 ஆயிரமாக உயர்த்தியுள்ளது. இப்படியாக அனைத்து துறைகளிலும் பாஜக அரசு பெண்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது" என்று கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications