அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச டேப்லெட்கள் விநியோகம்! திட்டத்தை தொடங்கி வைத்தார் யோகி ஆதித்யநாத்
லக்னோ: பள்ளிக்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், ஆசிரியர் தினமான இன்று உத்தரப் பிரதேசத்தில் உள்ள 2.09 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச டேப்லெட்களை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் யோகி ஆதித்யநாத் பள்ளி கல்வியை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். இந்நிலையில் இது குறித்து அவர் கூறுகையில், "இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் உள்ள 44 ஆயிரம் தொடக்கப்பள்ளிகள் 'நிபுன்' அந்தஸ்தை பெற்றிருக்க வேண்டும் என்பதுதான் இந்த உத்தரவு.

'நிபுன்' அந்தஸ்து என்றால், 3ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு முழுமையாக வழங்கியிருக்க வேண்டும் என்பதை தான் நிபுன் அந்தஸ்து என்று சொல்லப்படுகிறது.அதன்படி உத்தரப் பிரதேசத்தில் 75 நிபுன் தொகுதிகள் உருவாக்கப்படும். இந்த தொகுதிக்குள் 44 ஆயிரம் தொடக்கப்பள்ளிகள் அடங்கும்.
இதன் மூலம் எதிர்வரும் 2026-2027ம் ஆண்டிற்குள் அனைத்து மாணவர்களுக்கும் 3 வகுப்பில் முழுமையான எண்ணறிவும், எழுத்தறிவும் பெற்றிருப்பார்கள். இதற்கு சமக்ரா ஷிக்ஷாவின் மத்திய நிதியுதவி பயன்படுத்தப்படும். ஏற்கெனவே பள்ளிகளை மேம்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. விரைவில் அதன் முழு பலன் தெரிய வரும்" என்று கூறியுள்ளார். மேலும் இன்று நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், சுமார் 2.09 லட்சம் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச டேப்லெட்களை வழங்கும் திட்டத்தை யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்துள்ளார்.
பள்ளிக் கல்வியை மேம்படுத்தவும், கற்றலை எளிமையாக்கவும் இதுபோன்று டேப்லெட்கள் வழங்கப்படுகின்றன. ஏற்கெனவே சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான டேப்லெட்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 2.09 லட்சம் டேப்லெட்கள் விநியோகிக்கப்படுகின்றன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications