ஒரே அசிங்கமா போச்சு குமாரு.. மணமேடையில் திடீரென அந்த கேள்வி கேட்ட மணப்பெண்.. சோகத்தில் மாப்பிள்ளை
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் மாப்பிள்ளைக்கு 2ம் வாய்ப்பாடு கூட சொல்ல தெரியாததால் கோபம் அடைந்த இளம் பெண் திருமணத்தை நிறுத்தி உள்ளார்.
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகிறது என்று பெரியவர்கள் சொல்வார்கள். திருமணம் குறித்து பெண்ணோ, ஆணோ சரியான முடிவு எடுக்காவிட்டால், திருமணம் சொர்க்கத்தில் நிச்சயக்கப்பட்டாலும் நரகத்தில் தான் வாழ வேண்டியதிருக்கும். இருவருக்கும் இடையே சரியான புரிதல்கள் திருமணத்திற்கு முன்பே ஏற்படாவிட்டால் நிச்சயம் அந்த திருமணம் கசப்பாகவே இருக்கும்.
இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் ஒரு பெண், தனக்கு கணவராக வரப்போகிறரின் அறிவு திறனை சோதித்துள்ளார். அவருக்கு 2ம் வாய்ப்பாடு கூட தெரியாததை கண்டு அதிர்ச்சி அடைந்து திருமணத்தையே தடுத்து நிறுத்தி உள்ளார். பெற்றோர்கள் எவ்வளவோ சமாதானம் கூறியும் ஏற்க மறுத்துவிட்டார்.

உபியில் சம்பவம்
உத்தரப்பிரதேசத்தின் மஹோபா பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த மீனா(பெயர் மாற்றப்பட்டுள்ளது)வுக்கும் திருமணம் செய்ய பெற்றோர் ஏற்பாடு செய்தனர் திருமண நாளில் வீடே களை கட்டியிருந்தது. இரு வீட்டாரும் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து மகிழ்ச்சியுடன் இருந்தனர்.

கல்வி தகுதி சோதனை
இந்நிலையில் கொஞ்சம் நேரத்தில் திருமணம் நடைபெற போகிறது என்கிற நிலையில், மணப்பெண் மீனா, தனக்கு கணவனாக வரப்போகிறவரின் கல்வி தகுதியை சோதிக்க விரும்பி உள்ளார். திருமணத்திற்கு இருவீட்டார்களும் திரண்டு இருந்தனர்.

விழித்த மாப்பிள்ளை
மாப்பிள்ளையும், பெண்ணும் மணக்கோலத்தில் இருந்தனர். இந்நிலையில் மாப்பிள்ளையிடம் 2வது வாய்ப்பாடு கூறும்படி மணப்பெண் கேட்டுள்ளார். ஆனால் மாப்பிள்ளைக்கு வாய்ப்பாடு தெரியவில்லை. மணப்பெண்ணிடம் திருத்திருவென விழித்துள்ளார். அப்போது தான் அவர் பள்ளிக்கு சென்றதில்லை என்பது மணப்பெண்ணுக்கு தெரியவந்துள்ளது.

மாப்பிள்ளை ஏமாற்றம்
இதனால் ஏமாற்றமடைந்த மணப்பெண், அவரை திருமணம் செய்து கொள்ள முடியாது என கூறி திருமணத்தை நிறுத்தும்படி தெரிவித்துள்ளார். மணப்பெண்ணின் குடும்பத்தினர் இளம் பெண்ணை சமாதானம் செய்ய எவ்வளவோ முயன்றனர். ஆனால் அவர் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை. இதன் காரணமாக மாப்பிள்ளை ஏமாற்றம் அடைந்தார். திருமணத்திற்கு வந்த உறவினர்களும், திருமணத்தை காண முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

அறிவுத்திறன் கேள்வி
திருமணத்திற்கு முன்பு சாம்பாத்தியம், சொத்து, படிப்பு, அழகு பார்க்கும் பெண்கள், இனி நிச்சயம் செய்யும் முன்பே அறிவு திறனையும் சோதித்து பார்க்க தொடங்கினால் பல பேருக்கு திருமணம் நடக்குமா என்பது சந்தேகம் தான்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications