வாக்கிங் போயிட்டு வர்றதுக்குள்ள 500 சவரன் கொள்ளை.. அதிர்ச்சியில் தொழிலதிபர்..! இது மதுரை சம்பவம்
Recommended Video

மதுரை: வீட்டின் பூட்டை உடைத்து 500 சவரன் நகை மற்றும் 8 லட்சம் ரொக்கம் கொள்ளை போன சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மதுரை அருகே காமராஜபுரத்தை சேர்ந்த தொழிலதிபர் தங்கவேலு என்பவரின் வீட்டில் இந்த கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவர் இன்று காலை நடைபயிற்சிக்கு சென்றுள்ளார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் தங்கவேலுவின் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

பின்னர் உள்ளேயிருந்த பூட்டை உடைத்து 500 சவரன் நகை மற்றும் 8 லட்சம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். நடைபயிற்சி முடித்து வீடு திரும்பிய தங்கவேலு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது நகை மற்றும் பணம் கொள்ளை போயுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதனையடுத்து கீரைத்துரை காவல்நிலையத்தில் தங்கவேலு புகார் அளித்தார்.
அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையர் ஜெயந்தி தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடைப்பயிற்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவதற்குள் இந்த துணிகர கொள்ளை நிகழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications