மாஞ்சோலையை தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்க தடை கோரி வழக்கு.. ஐகோர்ட் முக்கிய உத்தரவு

Subscribe to Oneindia Tamil

மதுரை: மாஞ்சோலை பகுதியை தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்க இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இந்த வழக்கை மாஞ்சோலை தொடர்பான பிரதான வழக்குகளோடு இணைத்து விசாரணைக்கு பட்டியலிட உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருக்கிறது.

மாஞ்சோலை தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருக்கும் வரை மாஞ்சோலை பகுதியை தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்க இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும், வனத்துறை மாஞ்சோலை பகுதி முழுவதையும் கையகப்படுத்தி வனமாகவே பராமரிக்கவும் உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து மதுரையைச் சேர்ந்த வைகைராஜன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்,

Manjolai Tirunelveli

அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், " தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் களக்காடு முண்டத்துறை புலிகள் சரணாலயம் அமைந்துள்ளது. யானை, புலி, சிறுத்தை, 2 ஆயிரத்து 250 வகை தாவரங்கள், 46 மீன் வகைகள், 19 வகை பாலூட்டிகள், 337 வகை பறவைகளுக்கு இருப்பிடமான இந்த களக்காடு முண்டத்துறை புலிகள் சரணாலயம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி ஆகும். இந்த பகுதியில் தான் மாஞ்சோலை எஸ்டேட் அமைந்துள்ளது.

மாஞ்சோலை டீ எஸ்டேட் பகுதியில் ஒரே பயிர் பயிரிடப்படுவதால், இப்பகுதியில் சூழல்கள் முழுமையாக மாறுபடுகிறது. இங்கு பயன்படுத்தப்படும் வேதி உரங்களால் இயற்கைச் சூழல்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. தற்போது பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட் முன்கூட்டியே தொழிற்சாலையை மூட முடிவெடுத்துள்ளது. மாஞ்சோலை பகுதி மக்களின் நலன் தொடர்பாக ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், நீதிமன்றம் அப்பகுதி மக்களை வெளியேற்ற தடை விதித்துள்ளது.

ஆகவே, மாஞ்சோலை தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருக்கும் வரை மாஞ்சோலை பகுதியை தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்க இடைக்கால தடை விதிக்க வேண்டும், வனத்துறை மாஞ்சோலை பகுதி முழுவதையும் கையகப்படுத்தி வனமாக பராமரிக்கவும் உத்தரவிட வேண்டும்" இவ்வாறு அந்த மனுவில் வைகைராஜன் குறிப்பிடப்பட்டிருந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி விஜயகுமார் அமர்வு, மாஞ்சோலை தொடர்பான வழக்குகளுடன் இந்த வழக்கையும் சேர்த்து பட்டியலிட உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

முன்னதாக மாஞ்சோலை தொடர்பான பிரதான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முக்கியமான யோசனை ஒன்றை தெரிவித்திருந்தது.மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை அரசின் டான் டீ ஏற்று நடத்தி, தொழிலாளர்களுக்கான மறுவாழ்வு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கி இருந்தது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு மனிதத் தன்மையுடன் அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அரசின் முடிவு குறித்து ஆலோசித்து நிரந்தர தீர்வுடன் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு வரும் ஜூலை 22ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+