மதுரை பாண்டி கோவில் முன்பு பூசாரி வெட்டிக் கொலை.. மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
மதுரை: மதுரை பாண்டி கோவில் வளாகத்தில் உள்ள ஆண்டிச்சாமி கோவில் முன்பு துணை பூசாரி மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக. பாண்டி கோவில் உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் அதே கோவிலின் வளாகத்தில் உள்ள ஆண்டிச்சாமி கோவிலில் பூசாரியாக மதுரையை ஆண்டர்கொட்டாரம் பகுதியை சேர்ந்த குருசாமி மகன் முத்துராஜா இருக்கிறார். இவர் நேற்று மதியம் 3 மணி அளவில் கோவில் அருகே இருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம கும்பல் வாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

அவரை தாக்கியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்கள்.. இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த அண்ணாநகர் காவல் துறை காவல்துறை முத்துராஜாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

மேலும் காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில் ஒரு வருடத்திற்கு முன்பு காதுகுத்து விழாவில் முத்துராஜாவுக்கும் கருப்பாயூரணி பகுதியை சேர்ந்த ஒரு கும்பலுக்கும் தகராறு நடைபெற்று வந்ததாகவும் அதற்கு பழிக்குப்பழியாக வாங்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலையால் பாண்டி கோவிலில் உள்ள கடைகள் அனைத்தும் பூட்டப்பட்டது.












Click it and Unblock the Notifications