Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கவனிச்சீங்களா.. ஒற்றை விரலை "திருப்பி".. பூத்துக்குள் மாஜி செய்த காரியம்.. திணறிய மதுரை

திமுகவை விமர்சித்து செல்லூர் ராஜு பேட்டி தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

மதுரை: , சட்டமன்ற தேர்தலில் இருந்த மனநிலை மக்களிடம் தற்போது இல்லை. திமுக எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்ற மக்களின் மனக்குமுறல் திமுகவுக்கு படிப்பினையை கொடுக்கும் என்று மாஜி அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

Recommended Video

    ஒற்றை விரலை திருப்பி காட்டி.. சார் சார் இப்படி.. பூத்துக்குள் திணறிய மாஜி.. ஒரே சிரிப்புதான்

    வாக்கு பதிவிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில் சொன்னதாவது: என் பேமிலியில் எல்லாரும் வந்து வாக்களித்துள்ளோம்.. தேர்தல் ஆணையம் பொறுத்தவரை, இந்த முறை வாக்காளர் பட்டியலில் குளறுபடி உள்ளது. ஒரு வார்டில் இருந்த வாக்காளர் பெயர் வேறு வார்டில் மாறி மாறி உள்ளது.

    வாக்காளர் பட்டியலை முறையாக தயாரிக்கவில்லை. இது பெரிய பாதிப்புதான்.. இது மாநகராட்சி, வார்டுகளுக்கான தேர்தல் இது.. ஒரு வார்டுக்கு உரியது இன்னொரு வார்டுக்கு போய் சேர்ந்துவிட்டால், அங்கே எப்படி நிதி ஒதுக்குவது? அந்த வார்டில் உள்ள பிரச்சனைகளை எப்படி அந்த மாமன்ற உறுப்பினர் தீர்த்து வைப்பார்?

     வெறும் மிஷின்

    வெறும் மிஷின்

    போன முறை தேர்தலில் நாம் யாருக்கு வாக்களித்தோம் என்ற சிலிப் வந்தது.. இந்த முறை அது இல்லை.. வெறும் மிஷின் மட்டும்தான் இருக்கு.. நான்கூட கேட்டேன், எங்கே அதுன்னு.. வெறும் மிஷின் மட்டும்தான் தந்திருக்காங்க சார்ன்னு உள்ளே சொன்னாங்க.. இதெல்லாம் எங்கே எங்கே போய் முடியுமோ தெரியவில்லை. பரிசுப்பொருள், பணப்பட்டுவாடா செய்வது திமுக பொறுத்தவரை வழக்கமான ஒன்று. திமுகவை பொறுத்தவரை, இதுபோன்ற நடவடிக்கைகளில் ஏற்படுவது ஒன்றுதான்..

     தம்பி விஜய்

    தம்பி விஜய்

    மக்களை சந்திக்கட்டும்.. ஆனால், கூட்டமாக, தேர்தல் சமயத்தில் செல்லக்கூடாது.. தேர்தல் விதிமுறைகளை மீறி யாரும் நடக்கக்கூடாது... விஜய் ஓட்டுப் போட்டது பற்றி நான் என்ன கருத்து சொல்ல முடியும்.. இந்த நாட்டில் சாதாரண பிரஜையில் இருந்து யாராக இருந்தாலும் கடமையாற்றுவது அவரவர் கடமை.. அந்த வகையில், விஜய் தம்பியும் ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார். இதுல கருத்து சொல்ல என்ன இருக்கு? எங்களுக்கு போட்டி திமுகதானே தவிர, விஜய் இல்லை..

     மறுமலர்ச்சி

    மறுமலர்ச்சி

    நான் இந்த முறை ஒவ்வொரு வீதியாக சென்றேன்.. மக்களை சந்தித்து பேசினேன்.. அவர்களிடம் நிறைய மாற்றம் ஏற்பட்டுள்ளது.. மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கு.. இந்த தேர்தர் முடிவிலேயே அது நிச்சயம் எதிரொலிக்கும்.. ஆனால், சட்டமன்ற தேர்தலில் இருந்த மனநிலை மக்களிடம் தற்போது இல்லை. திமுக எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்ற மக்களின் மனக்குமுறல் திமுகவுக்கு படிப்பினையை கொடுக்கும்... அதேசமயம், அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது, அது மக்கள் முகத்திலேயே தெரிகிறது" என்றார்.

    கையெழுத்து

    கையெழுத்து

    முன்னதாக, செல்லூர் ராஜு தனது மனைவி மகள் மற்றும் மருமகன் ஆகியோருடன் பூத்திற்கள் வாக்குகளை செலுத்த முயன்றார்.. அப்போது எந்த பக்கம் சென்று கையெழுத்து போடுவது என்று சில வினாடிகள் திணறிவிட்டார்.. பிறகு பூத்தில் இருந்த ஊழியர்கள் அவர்களை அழைத்து கையெழுத்திட சொல்லி, கையில் மை இட்டனர்.. வாக்குச்சாவடிக்குள் சென்று ஓட்டுப்போட்ட செல்லூர் ராஜூவை செய்தியாளர்கள் படமெடுத்தனர்.. சார் விரலை காமிங்க என்று கேட்டதற்கு, செல்லூர் ராஜு, ஒற்றை விரலை அவர்களிடம் காட்டினார். உடனே செய்தியாளர்கள், இப்படி இல்லை சார், மை வைத்த விரலை திருப்பி காட்டுங்க என்றதும், விரலை அவர்கள் பக்கம் காட்டினார்

     கொரோனா தொற்று

    கொரோனா தொற்று

    இதுவாவது பரவாயில்லை.. கடந்த முறை சட்டசபை தேர்தலுக்கு செல்லூர் ராஜூ ஓட்டுப்போட வந்தார்.. அது கொரோனா தீவிரமாக இருந்த நேரம்.. அதனால், தமிழகம் முழுவதும் பூத்களில், வாக்களிக்க வருவோருக்கு அங்கிருக்கும் தேர்தல் அலுவலர்கள் சானிடைசர் கொடுத்து கைகளை சுத்தம் செய்ய அட்வைஸ் செய்வார்கள்.. அதற்கு பிறகு ஒரு பாலிதீன் கையுறைகளை தருவார்கள்.. அந்த கிளவுஸை வலது கையில் அணிந்து கொள்ள வேண்டும் என்றும் சொல்வார்கள்..

     வாக்கு இயந்திரம்

    வாக்கு இயந்திரம்

    வலது கையில் அணிந்து கொண்டு, இடது கையில் மை வைப்பார்கள்.. அப்படியே வாக்கு இயந்திரம் அருகே வாக்கு செலுத்த அனுமதிக்கப்படுவார்கள். இப்படித்தான் எல்லாரும் அன்றைய தினம் செய்தார்கள்.. ஓட்டுப்போட வந்த செல்லூர் ராஜூவிடமும் கிளவுஸ் தந்தார்கள்.. அதை வாங்கி அவர் இடதுகையிலேயே மாட்டிக் கொண்டார்.. இடது கையிலேயே மை எடுத்து ஓட்டும் போட்டுள்ளார்.. ஓட்டுப்போட்டு, அதே கிளவுஸ் அணிந்த கையை, பூத்துக்குள் இருந்து மேலே உயர்த்தி காட்டி போஸ் கொடுத்துள்ளார்.

    சந்தேகம்

    சந்தேகம்

    செல்லூர் ராஜு கையை தூக்கி போஸ் கொடுத்தபிறகுதான், வாக்குச்சாவடியில் இருந்தவர்கள் அவரை கவனித்துள்ளனர்.. இதை பார்த்ததும், அமைச்சர் இடது கை விரலால் வாக்கு இயந்திரத்தின் பட்டனை அழுத்தினாரா? அல்லது வலது கை விரலை பயன்படுத்தினாரா என்ற சந்தேகம் எழுந்துவிட்டது.. இந்த சந்தேகம் பரவுவதற்குள் செல்லூர் ராஜு பூத்திற்குள் நின்று கிளவுஸ் கையை தூக்கி காட்டிய போட்டோ வைரலாகிவிட்டது..

    வித்தியாசம்

    வித்தியாசம்

    "விஞ்ஞானி விஞ்ஞானி தான்ய்யா... எப்பவுமே வித்தியாசமாதான் யோசிப்பதில் இவரை மிஞ்ச ஆளில்லை" என்று கமெண்ட்கள் பதிவாகிவிட்டன.. இன்றுகூட ஓட்டை போட்டுவிட்டு விரலை திருப்பி காட்டி போஸ் தந்தார்.. தமிழ்நாட்டிலேயே வித்தியாசமாக சிந்திக்கக்கூடியவதில் செல்லூர் ராஜுவை மிஞ்ச ஆளில்லை என்ற முணுமுணுப்புகள் மதுரையில் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கின்றன..!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+