நேரமாகுது.. ஷட்டரை திறங்க! மதுரையில் பார் திறக்கும் முன் கதவு இடுக்கு வழி.. மது வாங்கிய அதிமுகவினர்
மதுரை: மதுரையில் நடக்கும் அதிமுக மாநாட்டில் மது வாங்குவதற்காக அதிமுகவினர் லைனில் காத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் இன்று மதுரையில் நடைபெறுகிறது. இன்று காலை கொடியேற்றி கூட்டத்தை தொடங்கி வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளர் ஆன பின் நடக்கும் முதல் பெரிய பொதுக்கூட்டம் இது. மதுரை ரிங்ரோடு பகுதியில் இந்த கூட்டம். நடக்கிறது. கிட்டத்தட்ட 63 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த மாநாட்டிற்காக 100 டன் அரிசி வாங்கப்பட்டு உள்ளது. அதேபோல் 300 டன் காய்கறிகள் வைக்கப்பட்டு உள்ளது. 100 டன் பருப்பு வாங்கப்பட்டு உள்ளது. இந்த எழுச்சி மாநாட்டிற்காக கிட்டத்தட்ட 60 ஆயிரம் சதுர அடி பரப்பில் மேடை மட்டும் அமைக்கப்பட்டு உள்ளது.
ஜெயலலிதா, எம்ஜிஆர் படத்தோடு கோட்டை மாதிரியில் மேடை அமைக்கப்பட்டு உள்ளது. 10 லட்சம் பேருக்கு உணவு தயாரிக்கப்பட்டு உள்ளது. 3 அரங்குகள் உணவு சாப்பிட அமைக்கப்பட்டு உள்ளது. 10 இடங்களில் 40 ஆயிரம் வாகனம் அமைக்கப்பட்டு உள்ளது.
கொண்டாட்டம்: அதேபோல் 500 லிட்டர் தண்ணீர் தரும் அளவிற்கு ஆங்காங்கே டேங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் மாநாட்டிற்கு இடையே நிர்வாகிகள் சோர்வு அடையாமல் இருக்க காலை, மாலை கரகாட்டம் நடக்க உள்ளது.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசை கச்சேரி காலையில் நடைபெற்றது. அதேபோல் மதுரை முத்துவின் பட்டிமன்றமும் இடம்பெற்றது. காலையில் எடப்பாடி பழனிசாமி இந்த நிகழ்விற்கான கொடியை ஏற்றினார். அப்போது ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது.
மது பாட்டில்: இந்த நிலையில் இன்று மதுரை அதிமுக மாநாடு நடக்கும் பகுதியில் உள்ள தனியார் மதுபான பார் திறப்பதற்கு முன்பே அதிமுகவினர் அங்கே குவிந்தனர். பார் 12 மணிக்கே திறக்கும் என்றாலும் காத்திருக்க முடியாமல் ஷட்டரை திறங்க திறங்க என்று அதிமுகவினர் கோரிக்கை விடுத்தனர். நேரம் ஆக ஆக இங்கே கூட்டம் அலைமோதியது. கடைசியில் கதவு திறக்கும் முன்பே கதவு இடுக்கு வழியே கூடுதல் விலை கொடுத்து மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.
எத்தனை பேர்: 2 லட்சம் பேர் கலந்து கொள்ளும் விதமாக இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்து உள்ளன. கூட்டத்திற்கு வரும் மக்கள் பலர் நேற்றே இதற்காக மதுரை வந்து சேர்ந்தனர். மதுரையில் இன்று காலை எடப்பாடி பழனிசாமி கொடி ஏற்றி கூட்டத்தை தொடங்கி வைப்பார்.
அதன்பின் இன்று காலை பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடக்கும். அதை தொடர்ந்து இன்று மாலை 5 மணி அளவில் தலைவர்கள் உரை நிகழ்த்துவார்கள். 6 மணிக்கு எடப்பாடி பழனிசாமி உரை நிகழ்த்துவார். 7. 30 மணிக்கு முன்பாக நிகழ்வுகள் முடிந்து உணவு வழங்கப்படும்.
இன்று மூன்று வேளையும் சைவம் மற்றும் அசைவ உணவுகள் மக்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து முடித்துள்ளன. கிட்டத்தட்ட 3 ஆயிரம் சமையல் கலைஞர்கள் சேர்ந்து இந்த முறை உணவு தயார் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications