Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜவுடன் ஏன் அதிமுக கூட்டணி வைக்கவில்லை தெரியுமா? ராஜன் செல்லப்பா சொன்ன அந்த பாயிண்ட்! கவனிச்சீங்களா

Subscribe to Oneindia Tamil

மதுரை: பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தது 100க்கு 100 சதவீதம் சரியானது என்றும், அவர் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்றும் மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜன் செல்லப்பா விளக்கி கூறியுள்ளார்.

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும், அமைப்பு செயலாளருமான விவி ராஜன் செல்லப்பா இன்று மதுரையில் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த ராஜன் செல்லப்பா, எடப்பாடியின் பிரசாரத்தால் அதிமுகவின் வெற்றி உறுதியாகிவிட்டது என்று கூறினார். ராஜன் செல்லப்பா கூறியதாவது:-

AIADMK would have been destroyed If alliance Continues with BJP Rajan Chellappa

40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்: தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி அபார வெற்றி பெறும் வாய்ப்புகள் இன்று உருவாகியுள்ளது. இதிலும் குறிப்பாக மதுரை லோக்சபா தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் 40 தொகுதிகளை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். மதுரை லோக்சபா தொகுதியில் அதிமுக மிகப்பெரிய வெற்றியை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏனென்றால் எடப்பாடியின் பிரசாரம் மக்களிடம் சென்று சேர்ந்துள்ளது. எடப்பாடி மக்கள் மத்தியில் எடுத்து வைக்கின்ற வாதங்களுக்கு மக்கள் சிறந்த வரவேற்பை அளித்துள்ளனர். எதிர்க்கட்சிகளின் தவறை சரியாக சுட்டிக்காட்டுகிறார். எடப்பாடி கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத நிலையில் தான் திமுகவும், ஏனைய கட்சிகளும் உள்ளன. எடப்பாடியின் பரப்புரையிலேயே அதிமுகவின் வெற்றி உறுதியாகிவிட்டது.

ஏன் என்று சந்தேகம்: ஒருசிலருக்கு இன்னும் ஒரு சந்தேகம் இருக்கிறது. ஏன் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது என்ற சந்தேகம் இருக்கிறது. இன்றைக்கு இது மிக தெளிவாகியிருக்கிறது. அதிமுகவுடன் உடனிருந்து அதிமுகவை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் பாஜக கூட்டணியில் இருந்தது என்பதை மக்கள் இப்போது புரிந்துகொண்டுள்ளனர்.

எடப்பாடி பெருமை சேர்த்திருக்கிறார்: நாங்கள் தொடர்ந்து பாஜகவுடன் கூட்டணியில் இருந்திருந்தால், இப்போது அதிமுகவை அவர்கள் அழித்திருப்பார்கள். இந்த அழிவில் இருந்து அதிமுகவை காப்பாற்றிய மிகப்பெரிய பெருமை எடப்பாடிக்கு உண்டு. சில பேருக்கு ஏன் பாஜக கூட்டணியில் இருந்து விலகினார்கள் என்ற சந்தேகம் இருந்தது. இன்றைக்கு அவர்கள் செய்கிற செயல்களை பார்க்கும் போது எடப்பாடி எடுத்த முடிவு 100 க்கு 100 சதவீதம் சரியானது என்பதை தமிழக மக்களும் அதிமுகவினரும் அனைவரும் தற்போது உணர்ந்திருக்கிறார்கள்.

யாரிடமோ கொண்டு போய், மக்கள் சக்தி இல்லாதவரிடம் கட்சியை அடகு வைப்பதற்கா?.. மக்களுக்கு சம்பந்தம் இல்லாதவரிடம் போய், எப்படி கொடுக்க முடியும் என்று தான்.. அதிமுகவை அழிக்க நினைப்பதற்கு அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது?.. திறமை இருக்கிறது.. சகுனியாக இருக்கலாம்..

அதிமுகவுக்கு தான் வரவேற்பு: நீங்கள் எல்லாரும் பார்த்து இருப்பீர்கள் எங்களை எந்த மேடையில் இருந்தாலும் மக்கள் உற்சாகமாக வரவேற்பார்கள். ஆனால் பாஜகவின் தலைவர்களுக்கு மக்கள் கைதட்டுவதில்லை. வரவேற்பு கொடுப்பதில்லை. ஜேபி நட்டாவாக இருந்தாலும் மக்கள் வரவேற்பு கொடுப்பதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

உறுதியான நிலைப்பாடு: பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவித்தது. லோக்சபா தேர்தல் அறிவிப்புக்கு பிறகும் அதிமுகவை கூட்டணியில் இணைக்க பாஜக முயற்சித்ததாக சொல்லப்பட்டது. எனினும், பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக அதிமுக தலைமை உறுதியாக கூறியது.

இதையடுத்து, பாஜக தலைமையிலான கூட்டணியில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் இணைந்தனர். தேர்தல் பிரசாரத்தில் அண்ணாமலை அதிமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். தேர்தலுக்கு பிறகு அதிமுக காணாமல் போகும் என அண்ணமலை நேற்று பேசிய நிலையில் அதற்கு எடப்பாடி பழனிசாமி காட்டமான விமர்சனங்களை முன்வைத்தார்.

அதிமுக அண்ணாமலை மோதல்: இதனிடையே, இன்று தேனியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட பாஜக தலைவர் அண்ணாமலை, லோக்சபா தேர்தலுகு பிறகு அதிமுக டிடிவி தினகரன் வசமாகும் என்று பேசி பரபரப்பை பற்ற வைத்துள்ளார். அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு அதிமுகவினரும் காட்டமான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ ஆகியோர் அண்ணாமலையை விமர்சித்து பதிலடி கொடுத்திருந்தனர். எடப்பாடி பழனிசாமியும் இந்த பூச்சாண்டி வேலைகளுக்கு எல்லாம் அதிமுக பயப்படாது என்று பதிலடி கொடுத்திருந்தார். இந்த நிலையில் தான் அதிமுகவின் ராஜன் செல்லப்பாவும் இவ்வாறு கருத்து கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+