நாட்டு மாட்டு இனங்களை காப்பாற்ற பொன்குமார் எடுக்கும் சூப்பர் முயற்சி.. என்ன தெரியுமா?
மதுரை: அலங்காநல்லூரைச் சேர்ந்த இளைஞர் பொன் குமார், தமிழகத்தில் நாளுக்கு நாள் அழிந்து வரும் நாட்டு மாட்டு இனங்களை காப்பாற்றும் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளார். வெளிநாட்டு மாடுகளை விட நாட்டு மாடுகளின் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் காளை உரிமையாளர்களுக்கு காங்கேயம் பசு மாடு மற்றும் கன்றை பரிசாக வழங்கி வருகிறார். இம்முறை போட்டியில் வென்றவருக்கும் இதேபோல் பரிசு வழங்க உள்ளார். பொன் குமாரின் இந்த முயற்சிக்கு அப்பகுதி மக்கள் பெருமளவில் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் நாட்டு மாட்டு இனங்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. மேலும் மக்களும் அதிக பால் உற்பத்தி செய்வதற்காக வெளிநாட்டு மாடுகளை வளர்ப்பதிலே தான் ஆர்வம் காட்டுகின்றனர். அழிந்து வரும் நாட்டுமாட்டு இனங்களை பாதுகாக்கும் வகையில் அலங்காநல்லூர் பகுதியில் சேர்ந்த பொன் குமார் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார்.

அதில் குறிப்பாக தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பாலமேட்டில் நடைபெறும் போது அதில் வெற்றி பெறும் காளை உரிமையாளர்களுக்கு காங்கேயம் பசு மாடு மற்றும் அதன் கன்று குட்டியையும் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக வழங்கி வருகிறார். இந்த ஆண்டும் பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்ட காளையின் உரிமையாளருக்கு காங்கேயம் பசு மாடு வழங்க உள்ளார். பொன்குமாரின் இந்த செயலுக்கு அந்தப் பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications