மதுரைக்கு வந்த அழகர்.. பெரியார் சிலை மீது ஏறி பக்தர்கள் தரிசனம்! திருவிழாவில் அரங்கேறிய சுவாரசியம்!
மதுரை: மதுரை சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில் அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வுக்காக மதுரைக்கு வந்தடைந்தார். அப்போது கூட்டம் அதிகமாக இருந்ததால் பெண்கள் குழந்தைகள் பெரியார் சிலை மீது ஏறி நின்று அழகரை தரிசித்தனர். பத்திரமா இருங்க என பெரியார் கூறியிருப்பார் என கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
மதுரை என்றாலே திருவிழா தான். அதுவும் மதுரை சித்திரை திருவிழா என்றால் சொல்லவே தேவையில்லை. ஏப்ரல் இறுதியில் தொடங்கி மே இரண்டாவது வாரம் வரை சித்திரை திருவிழாவின் கொண்டாட்டங்களை வார்த்தைகளில் சொல்லி விட முடியாது.
இந்த ஆண்டு, ஏப்ரல் 29 - சித்திரை திருவிழா கொடியேற்றமும், மே 06 - மீனாட்சி பட்டாபிஷேகமும் மே 08 - மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து மே 09 - மீனாட்சி திருத்தேரோட்டம், மே 10 - கள்ளழகர் புறப்பாடு நடைபெற்றது.

அந்த வகையில் மீனாட்சி திருக்கல்யாணம் சிறப்பாக நடந்தேறிய நிலையில் மீனாட்சி பார்ப்பதற்காக அழகர் மதுரைக்கு வருவார் அப்போது மண்டுக முனிவருக்கு சாப விமோசனம் கொடுப்பதற்காக வைகை ஆற்றில் எழுந்தருள்வது வழக்கம். இன்று அந்த நிகழ்ச்சி நடக்கவிருக்கும் நிலையில், அதற்காக நேற்று மதுரைக்கு வந்தடைந்தார் அழகர்.
ஆயிரக்கணக்கான பக்தர் வெள்ளத்துக்கிடையே பல்லக்கில் பவனி வந்த அழகரை பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா முழக்கத்துடன் வரவேற்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை அடுத்து பெண்கள் குழந்தைகள் அழகரை தரிசிக்க முடியாமல் அவதி அடைந்த நிலையில் ஒரு சிலர் அங்கிருந்த பெரியார் சிலை மீது ஏறி நின்று அழகரை தரிசித்தனர்.

கடவுள் மறுப்பு கொள்கை கொண்டவர் பெரியார் என்றாலும் அழகரை பார்ப்பதற்காக அவரது சிலைக்கு அருகே நின்று அழகரை தரிசித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகமாக பரவியது. ஒரு சிலர்," அவர் உயிரோடு இருந்திருந்தால் கூட பாத்து பத்திரமா விழுந்துறாமா பாருங்க... எல்லாருக்கும் சம வாய்ப்பு கிடைக்கனும் பார்க்காதவங்க முதலில் பாருங்கனு சொல்லிருப்பாரு" என கமெண்ட் செய்து வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications