மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

15 ஆண்டுகளில் ரூ.65 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு: மின்வாரியத்துக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Google Oneindia Tamil News

மதுரை: 15 ஆண்டுகளில் 65 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தொடரப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் 10ம் தேதி வரை தமிழக மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையம் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினர் நியமனம் முறையாக நடக்கவில்லை என்று நிர்மல்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மின்வாரிய ஓழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினராக ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

Chennai high court madurai bench important order to Tamil Nadu Electricity Regulatory Commission

இந்நிலையில் இந்த வழக்கில் தன்னை எதிர் மனுதாரராக சேர்க்கக் கோரி மின் வாரிய ஒழுங்குமுறை ஆணைய முன்னாள் உறுப்பினர் நாகல்சாமி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில் தமிழக மின்வாரியததின் சில ஒரு சில தவறான கொள்கை முடிவுகள் காரணமாக கடந்த 15 ஆண்டுகளில் ரூ.65 கோடி அளவுக்கு மின்வாரியத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

ராஜூவ் காந்தி பிரதமராக வர ஓட்டுப்போடுங்க... வாக்கு கேட்ட இந்திய கம்யூ. வேட்பாளர் ராஜூவ் காந்தி பிரதமராக வர ஓட்டுப்போடுங்க... வாக்கு கேட்ட இந்திய கம்யூ. வேட்பாளர்

இந்த வழக்கினை விசாரித்த உயர்நீதிமன்ற, மதுரைக்கிளை, வரும் ஏப்ரல் 10ம் தேதி மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம் எந்த ஒரு கொள்கை முடிவும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. மேலும் எதிர்மனுதாரராக இணைந்துள்ள நாகல்சாமிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

English summary
chennai high court madurai bench important order to Tamil Nadu Electricity Regulatory Commission, Don't do any decision till April 10
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X