மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டம்.. சுவைத்து பார்த்து ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்!
மதுரை: தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான சிற்றுண்டியை சுவைத்து பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாளையொட்டி, மதுரையில் நெல்பேட்டை பகுதியில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள், எம்பி-க்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதனைத்தொடர்ந்து நெல்பேட்டை பகுதியில் உள்ள காலைச் சிற்றுண்டித் திட்டத்திற்கான நவீன சமையல் கூடத்தைப் பாா்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவர்களுக்கான காலை உணவை சுவைத்து ஆய்வு செய்தார். அப்போது சமையல் கூடம் சுகாதாரமாக இருக்கிறதா, சமையலுக்கு பயன்படுத்தப்படும் காய்கறிகளின் தரம் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து மாணவர்களுக்கான சிற்றுண்டியை சமையல் கலைஞர் வழங்க, அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுவைத்து பார்த்து பாராட்டினார். இதனைத்தொடர்ந்து சமையல் கூடத்தில் இருந்து மாணவர்களுக்கு சிற்றுண்டி கொண்டு செல்லும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் சிற்றுண்டிகள் கொண்டு சென்ற வாகனங்களை திறந்து பார்வையிட்டார். அடுத்ததாக சிம்மக்கல் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கு சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக பயணிக்கிறார்.
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications