முன்விரோதம்.. ஓட்டு போட வந்த திமுக பிரமுகர் வெட்டி கொலை.. மதுரையில் பயங்கரம்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    முன் விரோதம் காரணமாக திமுக பிரமுகர் கொலை- வீடியோ

    மதுரை: ஓட்டு போட வந்த திமுக பிரமுகர் முன்விரோதம் காரணமாக மதுரையில் படுகொலை செய்யப்பட்டார்.

    மதுரை மாநகராட்சியின் மாநகராட்சி முன்னாள் மண்டல தலைவர் வி.கே.குருசாமி. திமுகவை சேர்ந்தவர். இவரது மருமகன் எம்.எஸ். பாண்டியன்.

    இவர் மதுரை சிந்தாமணி பகுதியில் வாக்களிக்க வந்தார். அப்போது 5 பேர் கொண்ட மர்ம கும்பல் நடுரோட்டில் பயங்கர ஆயுதங்களால் வெட்டியுள்ளனர். அப்போது உயிருக்கு பயந்து வீட்டுக்குள் ஓடிய அவரை துரத்தி சென்றனர்.

    பலி

    பலி

    அப்போது அவரை வீட்டுக்குள் வைத்து சரமாரியாக வெட்டி விட்டு மர்ம கும்பல் தப்பியது.

    உயிருக்கு போராடிய உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார்.

    விசாரணை

    விசாரணை

    உடனே அவரது உடல் ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

    போலீஸ் விசாரணை

    போலீஸ் விசாரணை

    தடயவியல் நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். இந்த கொலையானது முன்விரோதத்தால் நடந்த கொலையா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதிமுக பிரமுகர் மீது புகார்

    அதிமுக பிரமுகர் மீது புகார்

    முன்விரோதம் காரணமாக மதுரை மாநகராட்சியின் முன்னாள் மண்டல தலைவரும் அதிமுகவை சேர்ந்தவருமான ராஜபாண்டியன் தரப்பினர் கீழவெளி வீதி பகுதியில் அரிவாளால் வெட்டியதாக பாண்டியன் தரப்பினர் புகார் அளித்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+