மதுரையில் மாட்டிக்கிட்ட "இரட்டைவால் குருவி".. எலக்ட்ரிஷியன் பின்னாடியே 2 கோவை பெண்கள்.. அட ஆண்டவா
மதுரை: ஒரே சமயத்தில் 2 பெண்களையும் காதலித்து வந்துள்ளார் மதுரைக்கார இளைஞர் ஒருவர். பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பதுபோல, இந்த இளைஞரும் வசமாக அகப்பட்டு சிக்கியிருக்கிறார்.. என்ன நடந்தது கோவையில்?
மதுரை மாவட்டம் சமயநல்லூர் பகுதியை சேர்ந்த தம்பதி ஜோதி - தனலட்சுமி.. இவர்களது மகன் பிரேம்குமார்.. இவர் ஒரு எலக்ட்ரிஷியன்.. 30 வயதாகும் பிரேம்குமார், எங்கெல்லாம் எலக்ட்ரிஷியன் பணி கிடைக்கிறதோ, அங்கு சென்று வேலை பார்த்து வருவது வழக்கமாகும்.

கோவையில் வேலை: கடந்த சில வருடங்களாக, கோவை சீர நாயக்கன் பாளையத்தில் தங்கி, எலக்ட்ரீசியன் வேலையை பார்த்து வருகிறார்.. இந்த கோவையிலும் ஒவ்வொரு பகுதியில் வேலை பார்த்து வந்த நிலையில், கடைசியாக நேதாஜி ரோட்டிலுள்ள தியேட்டரில், எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்திருக்கிறார்.
இவர் மதுரையை சேர்ந்த திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.. திவ்யாவும் பிரேம்குமாரை தீவிரமாக காதலித்து வந்துள்ளார். ஆனால், பிரேம்குமார் திவ்யாவுக்கு தெரியாமல் கவிதா என்ற பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தார். இந்த கவிதாவுக்கு திருமணமாகிவிட்டது.. ஆனால், கணவரை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வந்திருக்கிறார். எனவே, கவிதாவுக்கு வாழ்க்கை தருவது பேசி, அவரிடம் ஆறுதலாக இருப்பது போல பழகி, நெருக்கமாகியிருக்கிறார் பிரேம்குமார்.
திவ்யா காதல்: திவ்யாவிடம் பழகுவதை கவிதாவிடமும், கவிதாவிடம் பழகுவதை திவ்யாவிடமும் மறைத்து வந்துள்ளார்.. அத்துடன் ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவரை அடிக்கடி பிரேம்குமார் சந்தித்து பழகி வந்துள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்வார் என்று திவ்யாவும், தனக்கு வாழ்க்கை தருவார் என்று கவிதாவும் நம்பிக் கொண்டிருந்தனர்.
ஆனால், அடிக்கடி காதலி திவ்யாவை மதுரைக்கு அனுப்பி வைத்துவிடுவாராம் பிரேம்குமார்.. அந்த நேரத்தில் கவிதாவுடன் கோவையில் உள்ள வீட்டில் வந்து தங்கிவிடுவாராம். அடிக்கடி திவ்யாவை மதுரைக்கு போக சொல்லவும், திவ்யாவுக்கு பிரேம்குமார் மீது சந்தேகம் வந்துள்ளது.
சந்தேகம்: அதேபோல, தன் வீட்டில் இருக்கும்போதே, ரகசியமாக திவ்யாவிடம் பேசிவந்ததால், கவிதாவுக்கும் பிரேம்குமார் மீது சந்தேகம் வந்துள்ளது. அதனால் இருவருமே தங்கள் சந்தேகங்களை பிரேம்குமாரிடம் தனித்தனியாக கேட்டிருக்கிறார்கள். 2 பேரிடமும் பொய்களை சொல்லி சமாளித்து வந்த நிலையில், இறுதியில் பிரேம்குமாரின் குட்டு அம்பலமானது.
ஒருகட்டத்தில், வசமாக இருவரிடமும் மாட்டிக் கொண்ட பிரேம்குமார், திவ்யாவுக்கு நேற்று போன் செய்து, "நீ வேறு யாரையாவது கல்யாணம் செய்து கொண்டு நன்றாக வாழ்" என்று சொல்லிவிட்டு பிரேம்குமார் போனை துண்டித்து விட்டாராம்..
திவ்யா அதிர்ச்சி: அதற்கு பிறகு திவ்யா, பிரேம்குமாருக்கு போன் செய்தபோது, செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தாம். இதனால், உடனடியாக கவிதாவுக்கு விஷயத்தை சொன்னார் திவ்யா.. பிறகு திவ்யாவும், கவிதாவும் சேர்ந்து, பிரேம்குமாரின் வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது..
அதனால், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பிரேம்குமார் ஃபேனில் லுங்கியால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு இருவருமே அதிர்ச்சிடைந்தனர். கோவை ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கும் தகவல் தந்தனர்.. அவர்கள் விரைந்து வந்து, சம்பவ இடத்திற்கு சென்று தூக்கில் தொங்கிய பிரேம்குமாரின் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..
தொடர்ந்து விசாரணையும் மேற்கொண்டு வருகிறார்கள். அப்போதுதான், காதலிகளிடம் பொய் சொல்லி அசிங்கப்பட்டுவிட்டதால், அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்டமாக தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications