மதுரையில் வேஷ்டியை மடிச்சி கட்டிட்டு யார்னு பாருங்க.. டிபன் பாக்ஸ் தந்தா போதுமா? அடடே செல்லூர் ராஜூ

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மாநகராட்சி கூட்டத்தை நடத்தி மாநகராட்சி பகுதிகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் மதுரை மாநகராட்சி ஆணையர், நகராட்சி அமைச்சர் உள்ளிட்டோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.. இல்லாவிட்டால் அதிமுக சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம்.. இது விளம்பரத்துக்காக நான் சொல்லல.. 10 வருடம் அமைச்சராக இருந்தாலும் என் தொகுதிக்கு நான் ஊழியனாகத்தான் இருந்தேன் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு திமுக ஆட்சி அழிந்து, அதிமுக ஆட்சி மலரும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் பேட்டி.

Madurai Sellur Raju Tiffin Box

மதுரை மாநகராட்சிக்கு எஸ்.எம்.எஸ் காலனி பகுதிக்குட்பட்ட ஆனந்த நகர், கங்கை, பவானி தெரு உள்ளிட்ட பகுதிகளில் கழிவு நீர் அடைப்பு ஏற்பட்டு சாலை வீதிகளில் வழிந்து செல்வதை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு செய்ய வந்தார்..

வேட்டியை மடித்து கட்டி

ஆனால், கழிவு நீர் அதிகம் காணப்பட்டதால் அதில் அவரால் இயல்பாக நடந்து செல்ல முடியவில்லை.. இதனால் வேட்டியை மடித்து கட்டி அந்த பகுதியில் நடந்து சென்றார்... செல்லூர் ராஜூவை பார்த்ததுமே, அங்குள்ள மக்கள் திரண்டு வந்து, பாதாள கழிவு நீர் வெளியேறி வருவதால் தங்களுக்கு மிகவும் அவதியாக உள்ளதாகவும், இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்..

மேலும், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தங்களது தொகுதியில் நடக்கும் மற்ற குறைகளையும் எடுத்து சொன்னார்கள்..

மதுரையில் செல்லூர் ராஜா

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது, "உங்கள் தொகுதி முதலமைச்சர் திட்டம் பயனில்லை.. தமிழக அரசின் திட்டமான உங்கள் தொகுதி முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரிடம் குறைகளை கேட்டிருந்தார்கள்..

அப்போது மதுரை மாவட்டத்தில் உள்ள எஸ்.எம்.எஸ் காலனியில் கழிவு நீர் வசதியை சீரமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தேன். அதற்கு, இது மாநகராட்சி நிதியின் கீழ் சீரமைத்து தருவதாகவும், 3 கழிவுநீர் உந்து நிலையம் அமைப்பதாகவும் கூறியிருந்தனர். ஆனால், இப்போது வரைக்கும், அந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டதாக தெரியவில்லை.. உங்கள் தொகுதி முதலமைச்சர் திட்டம் என்ன ஆனதும் என்று தெரியவில்லை.

பிறந்த குழந்தைகள்

நான் கோரிக்கை வைத்தபடி, இந்த பகுதியில் கழிவு நீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டிருந்தால், இப்படி கழிவு நீர் பிரச்சனை ஏற்பட்டிருக்காது. எஸ்எம்எஸ் காலனி பகுதியில் பிறந்த குழந்தைகளை வைத்துக்கொண்டு அவதிப்படுகிறார்கள்.. இதனால் அவர்களுக்கு தொற்று நோய் ஏற்படும் நிலைமையும் உள்ளது. இதற்கெல்லாம் விரைவில் நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும்.

முல்லை பெரியார் கூட்டு குடிநீர் திட்டத்தை., கடந்த அதிமுக ஆட்சியில் என்னுடைய முயற்சியால் எழுதி தரப்பட்டு, எம்ஜிஆர் நூற்றாண்டு நாள் தினத்தன்று அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை அதிமுக தொடங்கி வைத்த நிலையில் கடந்த 2023ம் ஆண்டு முடிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் இப்போது வரை அந்த திட்டமும் முழுமை பெறாமல் உள்ளது..

என் வீட்டுக்கே கனெக்‌ஷன் தரல

நாங்கள் குறை சொல்வோம் என்பதற்காகவே அவசர அவசரமாக ஒவ்வொரு வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு தந்து வருகிறார்கள். ஆனால், என் வீட்டுக்கும் இணைப்பு வழங்கவில்லை. இப்போதுள்ள அமைச்சர்கள் எதில் வருமானம் வருகிறதோ, அந்த வேலையைதான் பார்க்கிறார்கள்.. வேறு எதையும் செய்வதில்லை.

மதுரையில் 2 திமுக அமைச்சர்கள் இருக்கும் நிலையில், அவர்களது வேலையை செய்யாமல், பேட்டிகளை தந்து கொண்டிருக்கிறார்கள். உலகம் பூராவும் திமுக கொடியை கட்டுகிறார்கள்.. நம்ம உடம்பில் கூட கொடியை குத்திவிடுவார்கள் போலும்..

டிபன் பாக்ஸை வேற தர்றாங்க.. டிபன் பாக்ஸை தர வேணாம்னு சொல்ல.. மாநகராட்சி கூட்டத்தை நடத்த வேண்டியதுதானே? ஆணையாளரை கூப்பிடுங்க.

போராட்டம் நடத்துவோம்

மதுரை மாநகராட்சி கூட்டத்தை நடத்தி மாநகராட்சி பகுதிகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் மதுரை மாநகராட்சி ஆணையர், நகராட்சி அமைச்சர் உள்ளிட்டோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.. இல்லாவிட்டால் அதிமுக சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம்.. இது விளம்பரத்துக்காக நான் சொல்லல.. 10 வருடம் அமைச்சராக இருந்தாலும் என் தொகுதிக்கு நான் ஊழியனாகத்தான் இருந்தேன்..

37 லட்சத்துக்கு நாங்கள் எங்கள் ஆட்சியில் கட்டிய தடுப்புச்சுவர், இப்போதும் அஅப்படியே உள்ளது.. ஆனால், திமுக ஆட்சியில் அமைக்க ரூ. 17 கோடியில் அமைக்கப்பட்ட சாலை ஒரு மழைக்கே பெயர்ந்து வந்துவிட்டது. திமுக அழிய போகிறது.. கொடியும் நாட்ட முடியாது, கோட்டையையும் பிடிக்க முடியாது.. எனவே, 2026 தேர்தலுக்கு பிறகு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அழிந்து, அதிமுக ஆட்சி மலரும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+