எடப்பாடி பழனிசாமி பிரதமர் ஆவார்.. அப்புறமா ராஜ்யசபா எம்.பியாக பதவி ஏற்பார்.. அலற விடும் அதிமுக MLA
மதுரை: தேர்தலுக்குப் பிறகு கூட்டணி ஆட்சி அமைத்தால் எடப்பாடி பழனிசாமி பிரதமராக வருவார், பிரதமரான பின் மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்பார் என அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பாஜக ஒரு பக்கம், திமுக கூட்டணி ஒருபக்கம் தீவிரமாக ஓட்டு வேட்டை ஆடி வரும் நிலையில், அதிமுக தனி அணியாக, களமிறங்கி உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. அனைத்து கட்சி தலைவர்களும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

டிடிவி தினகரன் கேட்ட கேள்வி: இந்நிலையில் நேற்று மதுரையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், "இரட்டை இலையை வைத்துக்கொண்டு எடப்பாடி பழனிசாமி மக்களை ஏமாற்றி வருகிறார். துரோகத்தின் மூலமே அ.தி.மு.கவை பழனிசாமி கைப்பற்றியுள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பின் அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க தோல்வி அடைந்துள்ளது.
நமது கூட்டணியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை, முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர் முருகன், ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சையாகவும், நான் தேனியிலும் போட்டியிடுகிறோம். சேலத்து சிங்கம் எனக்கூறி கொள்பவர்களும், மணிகளும் ஏன் தேர்தலில் போட்டியிடவில்லை?" எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.
ராஜன் செல்லப்பா பதில்: இந்நிலையில் மதுரையில் அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், டிடிவி தினகரன் பேசியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. சேலத்து சிங்கம் என்று அழைக்கப்படும் எடப்பாடி பழனிசாமி ஏன் போட்டியிட பயப்படுகிறார்? வேறு ஒருவரை களத்தில் இறக்கிவிட்டு பலிகடா ஆக்குகிறீர்களே எனப் பேசியது பற்றி ராஜன் செல்லப்பாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா, "எதிர்க்கட்சி தலைவராக, சட்டசபை உறுப்பினராக தற்போது எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். ஒரு வேட்பாளர் 2 தொகுதிகளில் போட்டியிடக் கூடாது என்ற பாலிசி மக்கள் மத்தியில் உள்ளது. எம்.பியாக இருப்பவர் எம்.எல்.ஏவாக இருக்க முடியாது. 2 தொகுதிகளில் ஒருவர் நிற்பதால் தேவையில்லாமல் அரசாங்க பணம் வீணாகிறது.
தோல்வி உறுதி என்பது தெரியும்: தற்போது தங்கமணி சட்டசபை உறுப்பினராக இருக்கிறார். எடப்பாடி சட்டசபை உறுப்பினராக இருக்கிறார். வேலுமணி எம்.எல்.ஏவாக இருக்கிறார். நான் சட்டசபை உறுப்பினராக இருக்கிறேன். நாங்கள் இன்னொரு பதவி பொறுப்புக்கு வரவேண்டிய அவசியம் இல்லை. எங்களுக்கு என்ன அவசியம் உள்ளது. நீங்கள் இத்தனை சட்டசபை உறுப்பினர்களை வீணாக்குகிறீர்கள்.
நீங்கள் ஜெயிப்பதற்கான வாய்ப்பே இல்லை. மத்திய அமைச்சர் நேற்று பதவி ஏற்கிறார். நாளை மக்களவை தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பவர் இப்படி பதவி ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. அவருக்கு தாம் நிச்சயம் தோல்வியை சந்திப்போம் என்று முன்பே தெரியும்.
பலாப்பழம் வர்றாரு: ஓபிஎஸ்ஸுக்கு நன்றாகவே தெரியும் நாம் ஜெயிக்க முடியாது, இருக்கும் எம்.எல்.ஏ பதவியை கொஞ்ச நாள் வைத்திருப்போம் என்று. அவர் கட்சி மாறி இருக்கிறார். சட்டசபை உறுப்பினர் பதவியை அவர் இழக்க நேரிடப்போகிறது. தேவையில்லாத வேலையில் இறங்கி தன்னைத்தானே இழிவு படுத்திக்கொண்டார்.
இனிமேல் அவரை ஓபிஎஸ் என்று சொல்லாமல் பலாப்பழம் என்று தான் மக்கள் அழைக்கப் போகிறார்கள். பலாப்பழம் வர்றாரு பாருங்க என கிண்டல் செய்யப்போகிறார்கள்.
எடப்பாடி பிரதமர் ஆவார்: சட்டசபை உறுப்பினர்களாக இருப்பவர்கள் வீணாக அரசாங்க பணத்தை வீணடிக்க முயற்சிக்கிறார்கள். அல்லது கட்டாயம் தோல்வியைத்தான் சந்திப்போம் என்று தெரிந்தே நிற்கிறார்கள். இதுதான் உண்மையான நிலைமையே தவிர, இதில் டிடிவி தினகரன் எங்களை ஏன் குறை சொல்ல வேண்டும்.
எடப்பாடியார் ஏன் எம்.பி தேர்தலில் நிற்க வேண்டும் அவசியமே இல்லை? அதிமுக 40 தொகுதிகளிலும் வென்று, சிறு சிறு கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்தால் இந்திய துணைக் கண்டத்திற்கு பிரதமராக வர வேண்டும் என்றால் அன்று பிரதமராக வந்து ராஜ்யசபா எம்.பியாக வந்து விட்டு போகிறார்.
தலையில் மண்ணை வாரி: அனைத்து மாநில கட்சிகளும் சேர்ந்து எடப்பாடியார் ராஜதந்திரம் மிக்கவர், திறமையானவர் என்று உணர்ந்து தேவ கவுடா, சந்திரசேகர் எப்படி பிரதமர் ஆனாரோ அதுபோல் எடப்பாடி பழனிசாமி பிரதமர் ஆக வேண்டும் என்று நினைக்கும்போது, பிரதமர் ஆக்க நினைக்கும்போது ராஜ்யசபா எம்.பி ஆகிவிட்டு போகிறார்.
பேரறிஞர் அண்ணா முதலமைச்சராகும்போது ராஜ்யசபா எம்.பி.யாக தான் இருந்து வந்தார். வீம்புக்கு நின்று நீங்கள் தலையில் மண்ணை வாரி போட்டுக்கொள்கிறீர்கள் என்பதற்காக நாங்கள் மண்ணை வாரிப் போட்டுக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை." எனப் பேசியுள்ளார் ராஜன் செல்லப்பா.
-
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
அதிமுக தொகுதி பங்கீடு எல்லாம் ஓகேதான்! ஆனா.. ஜி.கே.வாசன் மிஸ்ஸிங்! கவனிச்சிங்களா!












Click it and Unblock the Notifications