ஆர்கே நகர்ல நிக்கலையே..திமுக என்ன அழிஞ்சா போயிடுச்சு!? அதிமுக மீது அவதூறு..ஆவேசமான ஆர்பி உதயகுமார்

Subscribe to Oneindia Tamil

மதுரை: தோல்லி பயத்தால் தான் தேர்தலில் அனைத்திந்திய அண்ணாதிராவிட போட்டியிடவில்லை என்று அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்த நினைத்து பேசுவதை, ஒரு நாளும் அதிமுக தொண்டர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் எனவும், புதுக்கோட்டை ,ஆர் கே நகர் இடைத்தேர்தலை புறக்கணித்த திமுக அழிந்து போய்விட்டதா?.என முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் பேசியுள்ளார்.

இதுதொடர்பாக பேசியுள்ள அவர்," இன்றைக்கு முக்கியமாக விவாதிக்கப்படுகின்ற ஒரு பொருளாக நடைபெறுகிற விக்கிரவாண்டி தேர்தலிலே, அதிமுக நிலைப்பாட்டை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பல்வேறு அவதூறு கருத்துக்களை வெளியிட்டு வருவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

vikravandi assembly by election 2024 RB Udayakumar Mk Stalin DMK admk

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக விளக்கத்தை தெரிவித்திருக்கிறார்கள் இருந்தபோதிலும் கூட தொடர்ந்து அவதூறு கருத்துக்களை முன்வைப்பதிலும், அதன் மூலமாக அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்த வேண்டும் என்பதிலே கண்ணும் கருத்துமாக சிலர் அவதூறு செய்தி வருகின்றனர்.

தோல்வி காணாத மனிதன் முழு மனிதனாக ஆக முடியாது என பேரறிஞர் அரிஸ்டாட்டில் கூறியதை இங்கே நினைவு கூர்ந்து தோல்வி காணாத இயக்கம் முழு இயக்கமாக பரிணாம வளர்ச்சி பெற முடியாது என்பதையும் நாம் இதோடு ஒப்பிட்டு பார்க்கலாம். தோல்லி பயத்தால் தான் தேர்தலில் அனைத்திந்திய அண்ணாதிராவிட போட்டியிடவில்லை என்று பேசுவதை விசுவாச தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இரட்டை இலை தவறானவர்கள் கையில் இருக்கிறது என்று தொடர்ந்து விமர்சித்து வருகிற சிலர் இன்றைக்கு முகவரி இழந்து ,அடையாளம் இழந்து, அங்கீகாரம், இழந்து அனைத்தையும் இழந்து அடைக்கலம் புகுந்திருக்கிற இடத்திற்கு விசுவாசத்தை காட்டுவதற்காக அவர் தொடர்ந்து அவதூறுகளை பரப்பி விடுகிறார்கள். இரட்டை இலை சின்னம் தவறான ஒரு கையில் அல்ல விசுவாச தொண்டன் கையில் தொடர்ந்து உள்ளது என்பதை நினைவுபடுத்துகிறேன்.

அதிமுக பல ஆண்டுகளாக பல தேர்தலை சந்தித்து இருக்கிறது, புரட்சித்தலைவர் காலத்திலே தொடர்ந்து கோட்டையின் பக்கமே கருணாநிதி அவர்களை எட்டிப் பார்க்க முடியாத வகையிலே தொடர் வெற்றியை பெற்ற புரட்சித்தலைவர். தலைமையில் கூட நாடாளுமன்றத்தில் எதிர்பார்த்த வெற்றி பெறாமல் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்த காலம் உண்டு என்று இது அண்ணா திமுக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏதோ அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் இந்த இடைத்தேர்தலை புறக்கணிக்குவது போல தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். புதுக்கோட்டை இடைத் தேர்தலை திமுக புறக்கணிக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டு அது முரசொலி வெளியானது அதற்குப் பின்பு திமுக அழிந்து போய்விட்டதா? காணாமல் போய்விட்டதா? சூழ்நிலைக்கு ஏற்றவாறு அந்தக் கட்சியினுடைய நிலைப்பாட்டை அறிவிப்பது என்பது கட்சி தலைவர்களின் ராஜதந்திரம் என்பதை இந்த தமிழ்நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள்.

அதன் பின் ஆர் கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடாதது ஏன் என கலைஞர் விளக்கம் அளித்த செய்தியும் நாம் இங்கே நினைவு கூறுகிறேன் அதேபோன்று ஆர்கே நகரில் திராவிட முன்னேற்றக் கழகம் டெபாசிட் இழந்திருப்பதையும் நினைவுகூறுகிறேன். 2009 கோடநாட்டில் அம்மா ஆலோசனைக் கூட்டம் நடத்தி நிர்வாகிகளிடம் கலந்துபேசி 5 சட்டமன்ற இடைத் தேர்தளை புறக்கணித்தார். அதற்குப் பிறகு மாபெரும் வெற்றி பெற்றோம்.

ஆகவே அதேபோலத்தான் இன்றைக்கும் எடப்பாடி பழனிசாமி மூத்த நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை செய்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிர்காலத்திற்கு எது நல்லது தொண்டர்களுக்கு எது நல்லது தமிழ்நாட்டுக்கு எது நல்லது என்ற அடிப்படையிலே தான் இன்றைக்கு அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கூடிய நிலைப்பாட்டை அறிவித்துள்ளார். இந்த ஒரு தேர்தல் உடைய வெற்றி தோல்வியிலே தமிழ்நாட்டில் எந்த மாற்றமும் ஏற்படாது.

அதே நாள் கடந்த கால வரலாற்றை பார்க்கின்றபோது ஆளும் கட்சிக்குதான் இடைத்தேர்தல் என்பது சாதகமாக அமையக்கூடிய ஒரு சூழ்நிலையிலே அவர்களுடைய அதிகாரபலம், ஆளாவலம்,படை பலம் அனைத்தும் அவர்களுடைய அதிகாரம் துஷ்பிரயோகம் இவை எல்லாம் நாம் பார்த்து பார்த்து சலித்து போன ஒன்று. எடப்பாடியார் ஒரு தொலைநோக்கு சிந்தனையோடு 2026 இலக்காக வைத்து, அம்மாவின் ஆட்சி தமிழகத்தில் மலர செய்வதற்கான தொலைநோக்கு திட்டத்தின் உடைய நிலைப்பாடு தான் இன்றைய தேர்தல் புறக்கணிப்பு இது ஒன்றும் தேச விரோதம் இல்ல.

ஆகவே இதுநாள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பின்னடைவு என்றோ? இதனால் இன்றைக்கு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வெற்றியை காண முடியாது என்றோ? யாரேனும் மனப்பால் குடித்தால் அது அவர்களுக்கு நிச்சயமாக தோல்வியில் தான் போய் முடியும்" என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+