சம்பள உயர்வு.. மாசத்துக்கு ரூ.6000 கட்டுப்படியாகுமா? கண்ணை மூடிட்டு கையெழுத்து போடுவீங்களா: கோர்ட்
மதுரை: வெறும் ரூ.6 ஆயிரத்தில் எப்படி ஒருத்தர் குடும்பம் நடத்த முடியும்? அப்படியானால் ஒருநாளைக்கு ரூ.200 போதுமா? இதுபோன்ற அரசாணைகள் எப்படி பிறப்பிக்கப்படுகின்றன? என்று தமிழக கல்வித்துறைக்கு, மதுரை ஐகோர்ட் கேள்வி எழுப்பியிருக்கிறது.
தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத இதர பணிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாதம் ரூபாய் 6000 சம்பளத்தை தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் இது போதுமானதாக இருக்காது என்பதை தெரிவித்து, மதுரையைச் சேர்ந்த கண்ணன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்..

வேலை வாய்ப்பு: அந்தமனுவில், "தமிழக பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பிலும், ஒருங்கிணைந்த ஊதியம் நிர்ணயிப்பதிலும் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை.
இதனால் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு ஊதிய விவகாரம் தொடர்பாக 2010-ம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர் அல்லாத ஆய்வக உதவியாளர், அலுவலக உதவியாளர் மற்றும் தூய்மைப் பணியாளர் ஆகியோருக்கு மாத ஊதியம் ரூ.6 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சமமான ஊதியம்: அதனால், அரசு மாதிரிப் பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு சமமான ஊதியம் வழங்கக்கோரி கடந்த 2020-ம் ஆண்டில் மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தொகுப்பூதியத்தில் மனுதாரர் தேர்வாகி உள்ளதால் 2010-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை பொருந்தாது என உத்தரவிட்டார். அதை ரத்து செய்து எனது பணியை வரன்முறைப்படுத்தவும், உரிய ஊதியம் வழங்கவும் உத்தரவிட வேண்டும்" என்று அந்த மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கானது, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இதுகுறித்து கூறும்போது, "சாதாரண தினக்கூலி பணியாளர்களுக்கு அரசு ரூ.600 ஊதியம் நிர்ணயம் செய்துள்ளது. அப்படியிருக்கும்போது மாதச்சம்பளமாக ரூ.6 ஆயிரம் என எப்படி நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டது? இப்போதைய விலைவாசி சூழலில், மக்களை பற்றியெல்லாம் யோசிக்க மாட்டீர்களா?
அரசாணைகள்: ரூ.6 ஆயிரத்தில் எப்படி குடும்பம் நடத்த முடியும்? அப்படியானால் ஒரு நாளைக்கு ரூ.200 போதுமா? இதுபோன்ற அரசாணைகள் எப்படி பிறப்பிக்கப்படுகின்றன? இதுபோன்ற உத்தரவுகளை கூடுதல் கல்வித்துறை செயலாளர் எப்படி பிறப்பிக்கிறார்? கண்ணை மூடிக்கொண்டு அரசாணையில் கையெழுத்திடுவதா?
அரசு பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத இதர பணிகளை செய்யும் ஊழியர்களுக்கு எப்படி இந்த சம்பளத்தை நிர்ணயித்து கையெழுத்து போட்டிருக்க முடியும். இதுபோன்ற விவகாரங்களிலெல்லாம் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். இது தொடர்பாக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்" என்று கூறி விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளனர்.
மாத சம்பளம்: மாதச்சம்பளமாக ரூ.6 ஆயிரம் என எப்படி நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டது? இப்போதைய விலைவாசி சூழலில், மக்களை பற்றியெல்லாம் யோசிக்க மாட்டீர்களா? ரூ.6 ஆயிரத்தில் எப்படி குடும்பம் நடத்த முடியும்? அப்படியானால் ஒரு நாளைக்கு ரூ.200 போதுமா? இதுபோன்ற அரசாணைகள் எப்படி பிறப்பிக்கப்படுகின்றன? இதுபோன்ற விவகாரங்களிலெல்லாம் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும் என்கிறது மதுரை ஐகோர்ட்
கல்வித்துறைக்கு நீதிமன்றம் எழுப்பியிருக்கும் இந்த கேள்விகள் மிகுந்த கவனத்தை பெற்று வருகிறது.. எனவே எப்படியும் இந்த விசாரணையின் முடிவில், அரசு பள்ளிகளில் ஆசிரியர் அல்லாது பணி புரியும் ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்த அதிக வாய்ப்புள்ளதாகவே எதிர்பார்க்கப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications