கண்டதேவி கோயில் தேர் வெள்ளோட்டம் எப்போது? “எல்லாம் சுபம்”.. தேதியை கோர்ட்டில் தெரிவித்தது தமிழக அரசு
மதுரை: சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோயில் தேர் வெள்ளோட்டம் எப்போது என்பது குறித்த தேதியை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று தெரிவித்தது தமிழக அரசு.
சிவகங்கை மாவட்டம் கண்டதேவி பகுதியை சேர்ந்த மகா சிதம்பரம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் பிரசித்தி பெற்ற கண்டதேவி கோவிலில் ஆனி மாதத்தில் தேர் திருவிழா வெகு விமர்சியாக நடைபெறும். தற்போது இந்த கோவிலுக்கு புதிய தேர் செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் தற்போது வரை வெள்ளோட்டம் செய்யப்படாமல் உள்ளது. தேர் வெள்ளோட்டத்திற்காக ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று 2019ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது புதிய தேர் விரைவில் வெள்ளோட்டம் விடப்படும். அதன் பிறகு கோயில் விழாக்களில் தேரோட்டம் நடத்தப்படும் என அறநிலையத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதிகள் தேர் வெள்ளோட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தனர். ஆனால் இதுவரை தேர் வெள்ளோட்டம் நடைபெறவில்லை. எனவே, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அறநிலையத்துறை இணை ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு அண்மையில் நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்பதால் நீதிபதி மிகவும் காட்டமாக சில கேள்விகளை முன்வைத்தார். அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர் தயாராக உள்ளதாகவும் ஆனால் பல பிரிவினர்களுக்கு இடையே உள்ள பிரச்சினையால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதையடுத்து நீதிபதி, சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகிவிட்ட போதும் இன்னும் பல பிரிவினருக்கு இடையே ஒற்றுமை ஏற்படவில்லை என்ற சூழல் வருத்தம் தருகிறது. பல கோடி ரூபாய் செலவு செய்து தெருவில் நிறுத்தி வைக்கவா தேரை உருவாக்கினீர்கள்? அரசின் நடவடிக்கையில் ஒரு சதவீதம் கூட திருப்தி இல்லை. மாநில அரசால் தேர் வெள்ளோட்டத்தை நடத்த முடியவில்லை என்றால் துணை ராணுவம் உதவியோடு தேரை ஓட வைக்கவா? என கேள்வி எழுப்பினார். மேலும் 17 ஆம் தேதி (இன்று) தேர் வெள்ளோட்டத்தை நடத்துவது குறித்து முடிவெடுத்து அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்படி, நீதிபதி பி.புகழேந்தி முன்பு இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், கண்டதேவி தேர் வெள்ளோட்டம் தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 21ஆம் தேதி கண்டதேவி கோயில் தேர் வெள்ளோட்டம் நடைபெறும். அன்று காலை 6.30 மணிக்கு ஊர்மக்கள் ஒன்று கூடி தேர் வெள்ளோட்டம் நடைபெறும். அதற்கான பணிகள் தொடங்கியுள்ளது என்றார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications