என் மேல மை தடவினார்.. மயக்கம் ஆனேன்.. கண் திறந்து பார்த்தால்.. பெண் போலீஸ் அதிர்ச்சி புகார்
சாமியார் தன்னை ஏமாற்றி விட்டதாக பெண் போலீஸ் புகார் அளித்துள்ளார்
Recommended Video
மதுரை: "என் மேல மை போல ஒரு பொருளை தடவினார். மயக்கம் வந்துவிட்டது.. கொஞ்ச நேரம் கழித்து பார்த்தால், என் துணி கலைந்திருந்தது.. பாலியல் ரீதியான துன்பம் நடைபெற்றதை உணர்ந்தேன்" என்று பெண் போலீஸ் ஒருவர் மதுரை போலீஸ் கமிஷனரிடம் புகார் தந்துள்ளார்.
மதுரை மாவட்டம் விளாங்குடி பகுதியை சேர்ந்தவர் சந்தான லட்சுமி. தல்லாகுளம் ஸ்டேஷனில் ஏட்டாக வேலை பார்க்கிறார். வயசு 29. இவரது கணவன் பெயர் சீனிவாச பெருமாள். இவர்களுக்கு ஒரு பெண், ஒரு ஆண் என 2 குழந்தைகள் உள்ளனர்.
ஆனால் தம்பதிக்குள் பிரச்சனை ஏற்பட்டு 9 வருடமாக பிரிந்து வாழ்கிறார்கள். இந்த சமயத்தில் கணவர் தரப்பில் டைவர்ஸ் கேட்டு சந்தான லட்சுமிக்கு நோட்டீஸ் வந்துள்ளது. இந்த சமயத்தில்தான் பூமிநாதன் என்பவர் சந்தானலட்சுமிக்கு அறிமுகமாகி உள்ளார்.

புகார் மனு
புருஷனை எப்படியாவது சேர்த்து வைக்கிறேன் என்று சொல்லி ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு மேல் கறந்துள்ளனர். இறுதியில் பல வகையில் ஏமாந்துபோன சந்தான லட்சுமி மதுரை கமிஷனர் ஆபீசில் புகாருடன் வந்தார். அந்த மனுவின் சுருக்கம் இதுதான்:

பூமிநாதன்
"என் புருஷனுடன் என்னை சேர்த்து வைப்பதாக பூமிநாதன், மற்றும் ஆறுமுகம் சொன்னார்கள். கேரளா சாமியார் ஜோதி என்பவரை வரவழைத்து வசியம் செய்து அதன் மூலம் என் கணவரை என்னிடம் சேர்த்து வைப்பதாகவும், இதற்காக கணவரின் சட்டை, அவரது காலடி மண், 50 ஆயிரம் பணத்துடன் வருமாறு சொல்லவும், நானும் அப்படியே எடுத்து சென்றேன். காருக்குள் பூமிநாதன், ஆறுமுகம் மற்றும் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த சாமியார் ஜோதி இருந்தனர்.

பாலியல் துன்பம்
அப்போது சாமியார் ஜோதி, எனது உடலில் ஒருவகையான மை போன்ற ஒரு பொருளை தடவினார். அதன் பின்னர் எனக்கு மயக்கம் வந்துவிட்டது. சில மணி நேரம் கழித்து எனக்கு சுயநினைவு வந்த போது எனது ஆடை கலைந்த நிலையில், எனக்கு பாலியல் ரீதியான துன்பம் நடைபெற்றதை உணர்ந்து அதிர்ச்சி அடைந்தேன். இது சம்பந்தமாக வெளியே சொன்னால் கஞ்சா வியாபாரிகளை வைத்து சீரழித்து விடுவேன் என்று மிரட்டுகிறார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நடவடிக்கை
மனுவை பெற்றுக்கொண்ட மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி தந்தார். பின்னர் துணை கமிஷனர் சசிமோகன் இதுகுறித்து விசாரிக்குமாறு போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சாமியார் ஜோதி, பூமிநாதன், அவரது தந்தை கரந்தமலை மற்றும் ஆறுமுகம் ஆகிய 4 பேர் மீது தல்லாகுளம் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications