இரட்டை இலை சின்னத்துடன் கூடிய செங்கோல்! எடப்பாடி பழனிசாமிக்கு டைமிங்காக கிஃப்ட் தந்த டாக்டர் சரவணன்!
எடப்பாடி பழனிசாமிக்கு டைமிங்காக பரிசளித்த சரவணன்.
மதுரை: மதுரையில் ஆதரவாளர்களை அதிமுகவில் இணைக்கும் விழாவை நடத்தியுள்ள டாக்டர் சரவணன், எடப்பாடி பழனிசாமிக்கு டைமிங்காக கிஃப்ட் கொடுத்து கவனம் ஈர்த்திருக்கிறார்.
7 அடி உயரத்தில் இரட்டை இலை சின்னத்துடன் கூடிய தங்கமுலாம் பூசப்பட்ட செங்கோலை எடப்பாடி பழனிசாமிக்கு சரவணன் பரிசளித்திருக்கிறார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்காக இரட்டை இலை சின்னத்தை போராடி பெற்ற உற்சாகத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு இந்த செங்கோல் மேலும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மருத்துவருமான மதுரையை சேர்ந்த சரவணன் அண்மையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இதையடுத்து தனது ஆதரவாளர்களை அதிமுகவில் இணைப்பதற்கான நிகழ்ச்சியை மதுரையில் இன்று நடத்தி முடித்திருக்கிறார்.
இதில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி திமுக அரசையும், அமைச்சர் செந்தில்பாலாஜியையும் மிக கடுமையாக விமர்சித்தார். சாதாரண தொண்டனும் உயர்ந்த பதவிக்கு வரமுடியும் என்ற நிலை அதிமுகவில் மட்டுமே உள்ளதாக கூறி சரவணனையும் அவரது ஆதரவாளர்களையும் வரவேற்றார்.

சரவணன் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு செக் வைக்கும் விதமாக, அவர் ஏற்பாடு செய்த இணைப்பு விழாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து இன்று மதுரை வந்து சென்றிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
முன்னதாக எடப்பாடி பழனிசாமி வருகை தர மாலை 6 மணியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4.30 மணிக்கெல்லாம் விழா மேடைக்கு வந்துவிட்டார். நெல்லையில் திருமண விழாவை முடித்த கையுடன் மதுரையில் இணைப்பு விழாவில் பங்கேற்றுவிட்டு சாலை மார்க்கமாகவே சேலம் புறப்பட்டுச் செல்ல வேண்டும் என்பதால் முன்கூட்டியே நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்திருக்கிறார்.
-
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications