மதுரை மக்களுக்கு மாஸ் செய்தி! பல ஆண்டு எதிர்பார்ப்பு.. ஒரு வழியாக நடக்குது! வேற லெவல் தரமான மாற்றம்
மதுரை: மதுரை மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து இருந்த முக்கிய விஷயம் விரைவில் நடக்கப் போகிறது. இதன் மூலம் ஒட்டுமொத்த மதுரை மக்களுக்கும் மிகப் பெரியளவில் பயனடைய உள்ளனர்.
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து இருக்கும் முக்கிய நகரங்களில் ஒன்றாக மதுரை இருக்கிறது. கோயில்கள் சூழ்ந்த அழகிய நகரமான மதுரையில் ஐடி கம்பெனிகளும் கூட கணிசமாக இருக்கிறது.

இதனால் பக்கத்து மாவட்டங்களில் இருக்கும் மக்கள் மதுரைக்கு வருகிறார்கள். இருப்பினும், மதுரையில் டிராபிக் மோசமாகவே இருக்கிறது. இதைச் சரி செய்ய அங்கு மெட்ரோவை கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அட்டகாசமான மாற்றம்: மதுரை மக்களுக்கு மேலும் அட்டகாசமான மாற்றம் காத்திருக்கிறது. மதுரையில் முக்கிய பேருந்து நிலையமாக இருப்பது மாட்டுத்தாவணி பேருந்து நிலையம். பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பேருந்து நிலையத்தில் பல வசதிகள் இல்லை. இப்போது பயணிகளின் எண்ணிக்கையும் பேருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ள நிலையில், அதற்கேற்ப பேருந்து நிலையத்தை அப்டேட் செய்ய வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதற்கிடையே மதுரை மக்கள் பெரிதும் எதிர்பார்த்த இந்த விஷயம் இப்போது நடக்க உள்ளது. அங்குள்ள மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் மற்றும் ஆம்னி பேருந்து நிலையம் என இரண்டையும் சீரமைக்க முடிவெடுத்துள்ளனர். இதற்காக ரூ.1.8 கோடியில் மாநகராட்சி டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில், மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தின் சீரமைப்புப் பணிகள் மிக விரைவில் தொடங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

பஸ் ஸ்டாண்ட்: மாட்டுத்தாவணி மற்றும் அதன் அருகில் உள்ள ஆம்னி பேருந்து நிலையங்களில் இருந்து தினசரி பல லட்சம் மக்கள் அண்டை மாவட்டங்களுக்கும் அவ்வளவு ஏன் அண்டை மாநிலங்களுக்கும் செல்கிறார்கள். இந்த நேரத்தில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தை மறுசீரமைப்பு செய்வது அவர்களுக்கு மிகப் பெரியளவில் உதவியாகவே இருக்கும்.
பல்வேறு வழித்தடங்களில் செல்லும் பேருந்துகளுக்கு ஏற்ப மொத்தம் 8 பிளாட்பார்ம்கள் அமைக்கப்பட உள்ளது. மேலும், சுத்திகரிக்கப்பட்ட ஆர்ஓ தண்ணீர் வசதி, தாய்ப்பால் அறைகள் தவிர எனத் தேவையான அத்தனை வசதிகளும் இருக்கும் வகையில் மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் மறுசீரமைக்கப்பட உள்ளது.
மோசமான நிலை: மதுரையில் முக்கிய மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடமாக இருந்தும், பழமை வாய்ந்த பஸ் ஸ்டாண்ட்டில் போதுமான வசதிகள் இல்லை.. இங்கு அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு சூழலே இருக்கிறது. இங்குள்ள பாழடைந்த கான்கிரீட் மேற்கூரையின் பகுதிகள் பலமுறை இடிந்து கீழே விழுந்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாகவே இதுபோன்ற சம்பவங்கள் அங்குத் தொடர்ந்து கொண்டே இருந்தன. இதில் பல பயணிகளும் காயமடைந்துள்ளனர்.

அதேபோல இங்கே பேருந்து நிலையத்தில் இருக்கும் தாய்ப்பால் கொடுக்கும் அறை கூட மிக மோசமாகவே இருந்துள்ளது.. சுத்தமாக எந்தவொரு பராமரிப்பும் இல்லாமல் இருக்கிறது. இங்குள்ள சுகாதாரமற்ற சூழல் காரணமாக, தாய்ப்பால் கொடுக்கும் அறையைக் கூட மக்களால் பயன்படுத்த முடியாமல் இருந்தது. இந்தச் சூழலில் இந்த பேருந்து நிலையம் மறுசீரமைக்கப்படுவது அனைவருக்கும் மிகப் பெரிய அளவில் உதவும் என்றே இப்பகுதியில் உள்ள மக்கள் கூறுகின்றனர்.
இந்த மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், அடிக்கடி இடித்து விழும் கூரையின் பலவீனமான பகுதிகள் அகற்றப்பட்டு, அது புனரமைக்கப்படும் என்று கூறப்படுகிறது.. மேலும் இங்குப் பொதுமக்கள் நல்ல தண்ணீர் குடிக்கும் வகையில் தண்ணீர் குழாய்கள் மேம்படுத்தப்படவும் நடவடிக்கை எடுக்கப்படும். மின்சார ஒயர்களையும் சரி செய்யவும் திட்டமிட்டுள்ளன
இப்படி ஒட்டுமொத்தமாக மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையமே வேற லெவலில் மாறப் போகிறது. இது மதுரை வாசிகளுக்கு மிகப் பெரியளவில் உதவியாக இருக்கும் என்றே சொல்லப்படுகிறது. மதுரை மாவட்டத்தின் முக்கிய பேருந்து நிலையமாக இருக்கும் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் மறுசீரமைக்கப்படுவது மக்களுக்கு மதுரை வாசிகளுக்கு ஹேப்பி நியூஸ்தான்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications