மதுரை மேயர் கணவரின் சகோதரர் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்த மனைவி.. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
மதுரை: மதுரை மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்தின் சகோதரர் பொன் விஜய் மீது அவரது மனைவி பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலத்த காயமடைந்த பொன் விஜய் தீவிர சிகிச்சைக்காக ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாநகர மேயராக இருப்பவர் இந்திராணி. இவரது கணவர் பொன் வசந்தின் சகோதரர் பொன் விஜய் என்பவர் தேனி மாவட்டம், கூடலூரில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கும் , இவரது மனைவி இலக்கியாவுக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், மீண்டும் பொன் விஜய்க்கும், இலக்கியாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில், ஆத்திரமடைந்த இலக்கியா பொன் விஜய் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத பொன் விஜய்க்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, அருகில் இருந்தவர்கள் பொன் விஜயை மீட்டு அவசர சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் பொன் விஜய்க்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications