அடித்து ஆடும் பிடிஆர்.. "தொழில்நுட்பம்+ உற்பத்தி.." தமிழ்நாட்டின் எதிர்காலம் இதுதான்.. செம திட்டம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழ்நாட்டில் முக்கியமான 2ம் கட்ட நகரங்களில் ஒன்றாக இருக்கும் மதுரையில், ஐடி துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே புவிசார் அரசியல் மாற்றம் காரணமாகத் தமிழ்நாட்டிற்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்த அவர், மதுரையில் ஐடி துறை முதலீடுகளை ஈர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைப் பட்டியலிட்டார்.

தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து உள்ள முக்கிய நகரங்களில் ஒன்று மதுரை.. தமிழகத்தின் பழம்பெரும் நகரமாக உள்ள மதுரையை ஐடி துறையின் மையமாக உருவாக்கத் தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.

palanivel thiaga rajan madurai tamil nadu

இதைக் கருத்தில் கொண்டு பல தொலைநோக்கு திட்டங்களைத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையே மதுரையில் என்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்து அமைச்சர் பிடிஆர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.

அமைச்சர் பிடிஆர்: மதுரையில் இந்தியத் தொழில் கூட்டமைப்பு சார்பில் நடந்த 'கனெக்ட் மதுரை 2024' என்ற நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார். ஐடி துறையில் இந்தியா, குறிப்பாகத் தமிழ்நாடு, மிகப் பெரிய வளர்ச்சியை அடைவது உறுதி என்று அமைச்சர் பிடிஆர் தெரிவித்தார்.

தொழில்நுட்பம்+ உற்பத்தி: அந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மேலும் பேசுகையில், "உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு துறைகளில் மிகப் பெரிய வளர்ச்சி நடக்கிறது. நமக்கு இந்த துறைகளில் புதிய தொழிற்சாலைகள் தேவை. சீனாவில் இருந்து வெளியே வரும் சர்வதேச நிறுவனங்கள் அதன் பார்வையை இந்தியா பக்கம் திருப்புகிறது. இதனால் இந்தியாவிற்கு , குறிப்பாகத் தமிழகத்திற்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இது வெறும் தொடக்கம் தான். வரும் காலத்தில் இதில் பல வாய்ப்புகள் கிடைக்கும்..

திட்டங்கள்: மதுரையை ஐடி, ஐடிஇஎஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையின் மையமாக மாற்றத் தமிழ்நாடு அரசு சில முக்கிய திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறது. நான் முதல்வன் திட்டம், திறன் மேம்பாட்டு மையங்கள் போன்ற தற்போதைய திட்டங்களைப் பயன்படுத்தி, தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப இளைஞர்களைத் தயார்ப்படுத்த முடியும்.

முக்கியம்: வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தும் படிப்புகளை வடிவமைக்கப் பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், அதிவேகமான இணையம், நம்பகமான ஃபைபர் இணைப்பைப் பெறக் கவனம் செலுத்த வேண்டும். இதற்கான தொழில்நுட்ப உள்கட்டமைப்பில் நாம் முதலீடு செய்ய வேண்டும்.

நாட்டின் அனைத்து தரப்பு மக்களுக்கும் இணையச் சேவை சென்று சேர்வதை உறுதி செய்ய டெலிகாம் நிறுவனங்களுடன் சேர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். குவாண்டம் கம்ப்யூட்டிங் வசதிகளை அமைக்க ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். இதை எல்லாம் தொடர்ந்து செய்தால் மதுரை நிச்சயம் தொழில்நுட்பத்தில் முன்னணிக்குச் செல்லும்.

பிஸ்னஸ் செய்ய ஏதுவான சூழல்: இது மட்டுமின்றி பொழுதுபோக்கு மையங்கள், ஊழியர்கள் ரிலாக்ஸ் செய்யும் இடங்களைக் கொண்ட தொழில்நுட்ப பூங்காக்களை உருவாக்க வேண்டும். தொழில்துறையினர் ஈஸியாக புதிய தொழிலைத் தொடங்க ஒற்றை-சாளர அமைப்பைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இது எந்தவொரு சிக்கலும் இல்லாமல் பிஸ்னஸ் தொடங்கப்படவதை உறுதி செய்யும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+