மதுரைக்கு புது கமிஷனர்.. அதுக்குள்ள 4 பேரு மாறிட்டாங்களே.. தூக்கி அடிப்பதால் ஸ்தம்பிக்கும் பணிகள்!
மதுரை: மதுரை மாநகராட்சி ஆணையர் இன்று அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். மதுரை மாநகராட்சி ஆணையர்கள் அடிக்கடி மாற்றப்பட்டு வருவதால், நிர்வாகப் பணிகள் ஸ்தம்பிப்பதாகவும், அரசியல் தலையீடுகள் காரணமாகவே இந்த மாற்றங்கள் நடக்கின்றன என்றும் வேதனை தெரிவிக்கின்றனர் மதுரைவாசிகள்.
11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு இன்று அதிரையாக உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியராக இருந்த எல்.மதுபாலன் மதுரை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாநகராட்சி ஆணையராக இருந்த கே.ஜே.பிரவின் குமார் சென்னை மாநகராட்சியின் மத்திய மண்டல துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை மாநகராட்சி ஆணையர் மாற்றம்: திமுக ஆட்சிக்கு வந்தபிறகு மதுரை மாநகராட்சியில் 4 ஆணையர்கள் பொறுப்பு வகித்துள்ளனர். தற்போது வரை இருந்த மாநகராட்சி ஆணையாளர் பிரவீன்குமார், பொறுப்பேற்ற 4 மாதத்திலேயே மதுரையில் இருந்து சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2021ஆம் ஆண்டு ஜூனில் மதுரை மாநகராட்சி ஆணையராக இருந்த விசாகன், பதவி உயர்வு பெற்று திண்டுக்கல் ஆட்சியராக நியமிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ், மதுரை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார்.

அவர் பொறுப்பேற்று ஓர் ஆண்டு கூட நிறைவடையாத நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் திடீரென அவர் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். சில நாட்களில் அங்கிருந்தும் அவர் திருநெல்வேலிக்கு மாற்றப்பட்டார். கார்த்திகேயனுக்கு பதிலாக மதுரை கார்ப்பரேஷன் கமிஷனராக நியமிக்கப்பட்ட சிம்ரன் ஜீத் சிங் மதுரை மாநகராட்சி ஆணையராக சிறப்பாக செயல்பட்டு நிதி நெருக்கடியில் தத்தளித்த மாநகராட்சியை மீட்டு வருவாயை பெருக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
பிரவீன் குமார்: இந்நிலையில் அவர் மதுரைக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்ததுமே அவரும் மாற்றப்பட்டார். கடந்த ஜூன் மாதம் மதுரை மாநகராட்சி ஆணையராஜ கேஜே பிரவீன் குமார் நியமிக்கப்பட்டார். மதுரை கமிஷனராக பொறுப்பேற்று முதல் இரண்டு மாதங்கள் அவர், ஒவ்வொரு ஏரியாவையும், பிரச்சனைகளையும் தெரிந்து கொள்வதற்கே சரியாய்ப் போனது.
மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் நேரடி ஆய்வுகளுக்கு சென்று, மதுரை மாநகராட்சியின் மொத்த நிலவரத்தையும் தெரிந்துகொண்டு, பாதாள சாக்கடைப் பிரச்சனைகள், குடிநீரில் கழிவு நீர் கலப்பதற்கு ஒவ்வொரு வார்டாக முற்றுப்புள்ளி வைத்து வந்தார். அதற்குள், அவரும் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியராக பணியாற்றி வந்த எல்.மதுபாலன், மதுரை மாநகராட்சியின் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மீண்டும் மாற்றம்: மதுரை மாநகராட்சியில் கடந்த இரண்டரை ஆண்டுகளிலேயே 4 ஆணையர்கள் பணியாற்றியுள்ளனர். அடிக்கடி ஆணையர்கள் மாற்றப்படுவதால், தேவையற்ற நிர்வாக தாமதங்கள் ஏற்படுகின்றன. புதிய ஆணையர் வந்து மாநகராட்சி முழுவதும் சுற்றி, பிரச்சனைகளை அறிந்துகொண்டு ஆக்ஷனில் இறங்கப்போகும் சமயத்தில் மாற்றப்படுவதால் மக்கள் மத்தியிலும் அதிருப்தி ஏற்படுவதாக கூறப்படுகிறது.
மதுரை மாநகராட்சி ஆணையர் விரைவிலேயே மாற்றப்பட்டுள்ளதற்கான காரணம், அரசியல் தலையீடு தான் என்கிறார்கள் மதுரை அரசியல் வட்டாரத்தினர். மாவட்டத்தில் அமைச்சர்களில் ஒருவரும், திமுகவின் மாவட்ட நிர்வாகியும், மாநகராட்சி நிர்வாகப் பணிகளில் தலையிடுவதாகக் கூறப்படுகிறது.
அரசியல் தலையீடு: மேயர், அமைச்சர், ஆளுங்கட்சி மாவட்ட பொறுப்பாளர் என 3 பேர், மாநகராட்சி நிர்வாகத்தில் தலையிடுவதால், மதுரை மாநகராட்சி ஆணையர் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை என்றும், அரசியல் நெருக்கடிகளைச் சமாளித்து நிர்வாக ரீதியாக எல்லாவற்றையும் கண்ட்ரோலில் எடுப்பதற்குள் மாநகராட்சி ஆணையரையே மாற்றி விடுகின்றனர் என்றும் வேதனை தெரிவிக்கின்றனர்.
வடகிழக்குப் பருவமழை நெருங்கும் சூழலில், மாநகராட்சி முழுவதும் பல்வேறு பணிகள் இன்னும் இருக்கின்றன. இப்படியான சூழலில் ஆணையர் மாற்றப்பட்டுள்ளார். ஒருபக்கம், பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என அறிவுறுத்தி வரும் தமிழக அரசு, பணிகளை துரிதப்படுத்த முடியாத வகையில், இப்படி முட்டுக்கட்டையும் போடுகிறது, புதிதாக ஒருவர் வந்து, நிலைமையைப் புரிந்துகொண்டு செயல்பட தொடங்குவதற்குள் வடகிழக்குப் பருவமழையே வந்துவிடும், பிறகு, யாரைச் சொல்லி என்ன பயன் என்கிறார்க:ள் மதுரைவாசிகள்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications