"எல்லாத்தையும் இவர்களுக்காகதான் செய்தேன்"! என் மீது தவறில்லை! நிர்மலா தேவி அப்பீல் மனுவில் பரபரப்பு
மதுரை: நான் யாருக்காக மாணவிகளை பாலியல் ரீதியில் தவறாக வழிநடத்த முயன்றேன் என்பது குறித்து பேராசிரியை நிர்மலா தேவி பரபரப்பு புகார் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் கணிதத் துறையில் பேராசிரியையாக இருந்து வந்தவர் நிர்மலா தேவி. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலும் பாடம் எடுத்து வந்தார். இவருக்கு அந்த பல்கலைக்கழகத்தில் அதிக செல்வாக்கு இருந்ததாக கூறப்படுகிறது.

தேவாங்கர் கல்லூரியில் ஏழ்மை நிலையில் இருந்த மாணவிகளை நிர்மலா தேவி தொடர்பு கொண்டு அவர்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி முக்கிய புள்ளிகளுக்கு விருந்தாக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது ஒரு மாணவியை சமாதானம் செய்ய நிர்மலா தேவி பேசிய ஆடியோ ஆதாரத்தின் அடிப்படையில் அந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த ஆடியோ கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் இந்த வழக்கில் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. மேலும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டது.
வழக்கில் சிபிசிஐடி போலீஸார் நடத்திய விசாரணையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த முருகனும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகிய 3 பேர் மட்டுமே குற்றவாளிகள் என இறுதி செய்யப்பட்டது.
கடந்த 2018ஆம் ஆண்டு இந்த வழக்கில் 1,160 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீஸார் விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதையடுத்து இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வந்தது. கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி மேற்கண்ட மூவருக்கும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கியது.
முதலில் ஏப்ரல் 26 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என உத்தரவிட்ட நிலையில் உடல்நிலை பாதிப்பு காரணமாக அன்றைய தினம் நிர்மலா தேவி கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனால் தீர்ப்பு தேதி ஏப்ரல் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. கடந்த 29ஆம் தேதி தீர்ப்பின் நகலை நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பை வாசித்தார்.
அவர் கூறியிருப்பதாவது: மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக, முருகன், கருப்புசாமி ஆகியோருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் ஏதும் இல்லை. எனவே அவர்கள் இருவரையும் இந்த கோர்ட் விடுதலை செய்கிறது. அதே நேரத்தில் நிர்மலா தேவி குற்றவாளி என தனது தீர்ப்பில் பகவதி அம்மாள் தெரிவித்திருந்தார். மேலும் அவருக்கான தண்டனை விவரங்களை 30ஆம் தேதி அறிவிப்பதாக தெரிவித்திருந்தார்.
அதன்படி கடந்த 30ஆம் தேதி நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ 2.47 லட்சம் அபராதமும் வழங்கப்படும் என தீர்ப்பளித்தார். இதையடுத்து அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிர்மலா தேவி ஒரு மனுவை தாக்கல் செய்தார்.
அதில் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் எனக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்துள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இந்த வழக்கு முடியும் வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும். நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கும் நான் கட்டுப்படுவேன்.
இந்த வழக்கில் 2ஆவது, 3 ஆவது குற்றவாளிகளான மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என கூறி இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் அவர்களுக்காகத்தான் மாணவிகளிடம் செல்போனில் தவறாக வழிநடத்த முயற்சித்தேன். எனினும் இதனால் எந்த மாணவியும் பாதிக்கப்படவில்லை.
குற்றவாளிகளை விடுதலை செய்து பிறகு என்னை பல பிரிவுகளின்கீழ் தண்டித்து 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது ஏற்புடையதல்ல. எனவே இந்த வழக்கில் எனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும். இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து இந்த வழக்கை விசாரித்த விருதுநகர் சிபிசிஐடி போலீஸார் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications