ஓ.பன்னீர்செல்வம் அரசியலை விட்டு ஒதுங்கணும்! இணைப்புக்கு வாய்ப்பே இல்லை! ராஜன் செல்லப்பா ஆவேசம்!
மதுரை: அரசியலை விட்டே ஓ.பன்னீர்செல்வம் ஒதுங்க வேண்டும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆவேசம் காட்டியிருக்கிறார்.
Recommended Video
எடப்பாடி பழனிசாமியிடம் உள்ள படைபலத்தை பார்த்து பயந்து தான் இணைப்புக்கு வருமாறு ஓபிஎஸ் அழைப்பு விடுப்பதாக அவர் விமர்சித்திருக்கிறார்.
மேலும் திமுகவை எதிர்க்கும் மன தைரியமோ, துணிச்சலோ ஒ.பன்னீர்செல்வத்திடம் துளியும் கிடையாது எனக் கூறியிருக்கிறார்.

ராஜன் செல்லப்பா
எடப்பாடி பழனிசாமியை அன்புச் சகோதரர் எனக் குறிப்பிட்டு ஓ.பன்னீர்செல்வம் இணைந்து செயல்பட அழைப்பு விடுத்திருக்கும் நிலையில் அதிமுக சட்டமனற உறுப்பினரும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளருமான ராஜன் செல்லப்பா மிக ஆவேசமாக ஓபிஎஸ் பற்றி விமர்சித்திருக்கிறார். கட்சியின் மீது உண்மையிலேயே அக்கறை உள்ளவராக இருந்திருந்தால் ஜானகி அம்மா விட்டுக் கொடுத்ததை போல் இன்று எடப்பாடி பழனிசாமிக்கு அவர் விட்டுக் கொடுத்திருக்கலாமே என்றும் அவர் அவ்வாறு செய்திருந்தால் தியாகி என்று தாங்களே அவரை கொண்டாடி இருப்போம் எனவும் தெரிவித்தார்.

ஒதுங்க வேண்டும்
ஓ.பன்னீர்செல்வம் அரசியலை விட்டே ஒதுங்க வேண்டும் என வலியுறுத்திய ராஜன் செல்லப்பா, எடப்பாடி பழனிசாமியிடம் உள்ள படைபலத்தை பார்த்து பயந்து தான் இணைந்து செயல்வட வருமாறு அழைப்பதாக தெரிவித்தார். ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படுவது என்பது திமுகவுடன் இணைந்து செயல்படுவதற்கு சமம் எனக் கூறினார் ராஜன் செல்லப்பா.ஆளுமை மிக்க தலைவர் எடப்பாடி பழனிசாமி தான் என்றும் அதிமுக என்றால் எடப்பாடி பழனிசாமி எனவும் புகழாரம் சூடினார்.

தைரியம் இல்லை
ஓ.பன்னீர்செல்வத்துக்கு தலைவர் ஆகும் தகுதியில்லை என்று கூறிய ராஜன் செல்லப்பா, எடப்பாடி பழனிசாமியை தாங்கள் ஆதரிப்பதற்கான காரணங்களை அடுக்கினார். 4 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சியை நிலை நிறுத்தியது, ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்டியது என கட்சிக்காகவும் தொண்டர்களுக்காகவும் உழைத்தவர் எடப்பாடி எனப் பேசினார் ராஜன் செல்லப்பா. மேலும் எல்லாவற்றுக்கும் மேலாக ஓ.பன்னீர்செல்வத்திடம் திமுகவை எதிர்க்கும் மன தைரியம் இல்லை என சாடினார்.

வாய்ப்பு இல்லை
இதனால் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பை தாங்கள் பொருட்படுத்தப் போவதில்லை என்றும் மீண்டும் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைய வாய்ப்பே இல்லை எனவும் மிகவும் திட்டவட்டமாக கூறியிருக்கிறார் ராஜன் செல்லப்பா.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications